ஒரு ஆண்டில் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசா

  1. அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  2. இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர்.
  3. ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  4. 26,000 குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரை இழந்துள்ளனர்.
  5. தினமும் சராசரியாக 6 முதல் 8 குழந்தைகள் கை அல்லது கால்களை இழக்கின்றனர்.
  6. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம்
  7. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் எண்ணிக்கை- 10,000 முதல் 12,000.
  8. கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்- 175, ஐ.நா ஊழியர்கள்- 125.
  9. பாலஸ்தீனத்தில் உள்ள 1245 மசூதிகளில் 962 மசூதிகள் தரைமட்டம்.3 தேவாலயங்கள் தகர்ப்பு
  10. மொத்தமுள்ள 60ல் 19 கல்லறைகள் அழிப்பு
  11. அனைத்து பல்கலைக்கழகங்களும் தகர்ப்பு. 344 பள்ளிகள் தகர்ப்பு.
  12. 60% வீடுகள் தரைமட்டம்
  13. 67% விவசாய நிலங்கள் பாதிப்பு
  14. 53% கிணறுகள் நாசம்
  15. 95% கால்நடைகள் உயிரிழப்பு
  16. காசாவின் 85% மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
  17. உலக வங்கியின் கணிப்பின்படி சுற்றுச்சூழல் சேதம் 411 மில்லியன் (1 மில்லியன் = 10 லட்சம்)டாலர்.
  18. 39 மில்லியன் டன் போர் கழிவுகள் உருவாகியுள்ளன.
  19. எரிசக்தி, கடல்சார் சுற்றுச்சூழல், மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
  20. 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சேத மடைந்துள்ளன.
  21. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 2-8 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கிறது.
  22. மாசுபட்ட நீரால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவியுள்ளன.
  23. இடிபாடுகளால் தூசி பரவி நுரையீரல் நோய்கள் தீவிரமடைந்துள்ளன.
  24. இடிபாடுகளில் 800,000 டன் அஸ்பெஸ்டாஸ் இருக்கலாம்.
  25. இடிபாடுகளை அகற்ற 513-647 மில்லியன் டாலர் செலவாகும்.
  26. சோலார் பேனல்கள் அழிவால் நச்சு பொருட்கள் வெளியேறியுள்ளன.
  27. 1,675 கிலோ ஈயம் சுற்றுச்சூழலில் கலந்துள்ளது.
  28. விவசாய துறை சேதம் 629 மில்லியன் டாலர்.
  29. மரங்கள், பசுமை இல்லங்கள், பாசன கட்டமைப்புகள் சேதம்.
  30. 38-48% மரங்கள், விவசாய நிலங்கள் அழிக்கப் பட்டுள்ளன.
  31. விவசாய மண்ணில் கன உலோகங்கள் கலந்துள்ளன.
  32. கார்பன் உமிழ்வு அதிகரித்துள்ளது.
  33. காசாவின் ஒரே மின் நிலையம் சேதமடைந்தது.
  34. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.
  35. நீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது.
  36. கடலோர பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளன.
  37. வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
  38. சுற்றுச்சூழல் சீரமைப்புக்கு பல ஆண்டுகள் ஆகும்.
  39. மேற்கு கரை பகுதியில் ஒரு வருடத்தில்
  40. 741 பேர் கொல்லப்பட்டனர்.
  41. 11,000 பேர் கைது- பெண்கள், சிறுவர்கள் உட்பட.
  42. 4க்கும் அதிகமான அகதிகள் முகாம் மீது 50 முறை குண்டு வீச்சு
  43. 1429 வீடுகள் தகர்ப்பு
  44. 50% சாலைகள் நாசம்
  45. லெபனானில் கடந்த 3 வாரங்களில்
  46. 2056 பேர் கொல்லப்பட்டனர்.
  47. இதில் 127குழந்தைகளும் 200பெண்களும் அடங்குவர்.
  48. 9000 பேர் படுகாயம்
  49. 34 மருத்துவமனைகள் தகர்ப்பு
  50. 73 மருத்துவ உழியர்கள் உயிரிழப்பு.

இது மட்டுமல்லாது சிரியா, ஈராக் மீதும் இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தி பலரை கொன்றுள்ளது. ஈரானில் புகுந்து, ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டனும் அமெரிக்காவும் ஏமன் மீது குண்டுகளை வீசுகின்றன.

– அ.அன்வர் உசேன்

Leave a Reply