சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்

எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது.

எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌ முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை தலைவர்களாகிய நீங்கள் செய்ய வேண்டும்‌ என சின்னியம்பாளைய தியாகிகலுல் ஒருவரான ராமையன் தூக்குமேடை ஏறுவதற்கு முன் தினம் தங்ளை சந்திக்க வந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தோழர் பிற.ராமமூர்த்தி ரமணி எம்.பூபதி ஆகியோரிடம் கூறினார்.

ஏன் இவர்களுக்கு தூக்கு?

உலகம் முழுவதும் அன்று இடதுசாரிகளின் எழுச்சி மிகுந்த காலமாக இருந்ததால் இந்தியாவில், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளால் எந்த ஒரு எழுச்சியும் ஏற்பட்டு விடக்கூடாது என நாட்டின் அனைத்து மூலைகளிலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய முதலாளிகளோடு இணைந்து கம்யூனிஸ்ட்களை நசுக்கி வந்தது கொண்டிருந்தது

கோவை லட்சுமி மில் போராட்ட வெற்றி இந்த நால்வரை போல பல ஆயிரம் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் ஈர்த்து பல மில்களில் தொழிற்சங்கத்தை கட்டமைத்து வந்த காலம் அது.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடதுசாரி கருத்தியலை கலை மூலமாக பரப்பி ஆயிரக்கணக்கான இளைஞர்களை பஞ்சாலைத் தொழிலாளர்களான ராமையன்‌, வெங்கடாசலம்‌, ரங்கண்ணன், சின்னையன் ஆகியோர் அணிதிரட்டி வந்தனர்.


இந்நிலையில் ரங்கவிலாஸ்‌, ராதாகிருஷ்ணா போன்ற பல மில்களில் தொழிற்சங்கத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் மில் முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட ரவுடிக் கும்பல்கள் மூலம் தாக்குதலுக்குள்ளாகி வந்தனர்.

அதில் பொன்னையன் என்ற ரவுடியுடன் தோழர்கள் ராமையன்‌, வெங்கடாசலம்‌, ரங்கண்ணன், சின்னையன் மோதல் ஏற்பட்டது.இதில் பொன்னையன் மரணமடைய அவனது மரண வாக்கு மூலத்தை வைத்து இந்த நால்வருக்கும் தூக்கு வழங்கியது பிரிட்டிஷ் அரசு…

கம்யூனிஸ்ட்கள் வளர்ந்து விடக்கூடாது.மக்கள் அவர்களின் பின்னால் அணித்திரண்டு விடக்கூடாது எனவும்‌ அத் தோழர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என இந்த முதலாளிகள் பிரிட்டிஷ் அரசுக்கு பணத்தை வாரி இறைத்து சேவகம் செய்தனர்.

இந்த பிண்ணனியில் இரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்து நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்தது பிரிட்டிஷ் அரசு.

Leave a Reply