கற்றுணர்-எதிரிகளின் பலமான ஆட்சேபங்களை அச்சமின்றி ஆணித்தரமாக அடித்து நொறுக்கவும் கண்டனங்கள் கொடுப்பதற்கும் கற்றுணர் -பகத்சிங்
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நாத்திகம் பேசுபவர்கள் காலம் காலமாக.. எதிர்கொள்ள கூடிய விசயம்.. காலம் வரும் அப்ப கடவுள தேடுவ பாரு..என துவங்கி தலைகணம் அதிம்ப்பா இந்த காலத்து இளைஞர்களுக்கு என்பதே..
இதை இந்தியாவின் இளம் புரட்சியாளரான ஒருவரான பகத்சிங் கும் குறிப்பாக தன் நண்பர்கள் மத்தியிலேயே எதிர்கொண்டார்.தன் நண்பர்களால் ஆணவக்காரன் தலைகணம் மிக்கவன் என கருதப்பட்டதால் தான் வெறும் வறட்டு நாத்திகனோ தலைகணம் கொண்டு பெருமைக்காக நாத்திகன் ஆனவனோ அல்ல என்று நான் ஏன் நாத்திகன் ஆனேன் என தன்னிலை விளக்கமளித்து எழுதினார்.
ஆரிய சமாஜத்தில் தீவிர பற்று கொண்ட தாத்தாவால் வளர்க்கப்பட்ட பகத்சிங் சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கையுடன் இருந்து வந்தார்.அது தன் மத பற்றாக் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு கடவுள் உண்டு என்று நம்பினார்.
தனது கல்லூரி காலத்தில் பல மதம் குறித்து படித்து ஆராய்ந்து விவாதித்தாலும் முழு நாத்திகராக பகத் மாறவில்லை கடவுளை தேடும் பணியிலேயே இருந்தார்.
பின்நாட்களில் சுதந்திர போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட துவங்கிய பகத்சிங் பல்வேறு புரட்சிகர இயக்கங்களின் தலைவர்களுடன் கடவுள் குறித்த கேள்விகளை கேட்டு சீரிய விவாதத்தை ஏற்படுத்தினார்.சரியான உறுதியான பதிலை தேடிக்கொண்டிருக்கும் பகத் திற்கு எந்த பதிலும் சரியான விளக்கத்தை தரவில்லை.இஷ்டமிருந்தால் கடவுளை வணங்கு இல்லை என்றால் விட்டு விடு என்று அவரின் முதல் புரட்சிகர குழுவின் தலைவ கூறினார்.இது நாத்திக பதிலாக இருந்தாலும் ஒரு உறுதியான பதிலாக இல்லாமல் நழுவி செல்லும் பதிலாகவே பகத் சிங் பார்த்தார்.
எனவேதான் தன் புரட்சிகர இயக்கத்திற்கென ஓர் லட்சியம் வேண்டும் இலட்சியம் இல்லாத புரட்சி குழு வெற்றியை பெற முடியாது என உணர்ந்து தனது புரட்சி குழுவிற்கான லட்சியத்தை வகுக்க உலக நாடுகளின் பல்வேறு புரட்சி குழுக்கள் பற்றி பயில துவங்கினார்.
Anarchist பக்குனின் தத்துவங்கள்,மார்க்சிய நூல்கள்,புரட்சியாளர் லெனின் புத்தகங்கள், பக்குனின் God and state நிர்லம் சாமியின் Common sence உள்ளிட்ட புத்தகங்களை தீவிரமாக படிக்க தொடங்கினார்
பெரும்பாலும் உலகப்புரட்சியாளர்கள் அனைவரும் நாத்திகர்களாகவே இருந்தது பகத்சிங்கை ஈர்த்ததோடு உத்வேகப்படுத்தியது.உலக புரட்சிகர இயக்கங்களின் புதத்கங்களும் லட்சியங்களும் வறட்டு நாத்திகவாதியாக இல்லாமல் பகத்சிங்கை அறிவியல் பூர்வமான நாத்திகவாதியாக அதாவது பொருள்முதல்வாத எதார்த்த வாதியாக மாற்றியது.
1926 ல் தன் நண்பர்கள் மத்தியில் தன்னை நாத்திகராக பிரகடனம் செய்து கொண்டார்.பெருமைக்காக நாத்திகன் என சொல்லிய பலர் இடர்பாடுகள் ஏற்படும் போது ஓடிச்சென்று ஆத்திகமெனும் மாய உலகில் புகுந்து ஆறுதல் தேடியதை பார்த்திருப்போம்.
அத்தகைய சூழல் பகத் சிங்கிற்கும் வந்தது 1927 ல் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு புரட்சிகர இயக்கங்களின் உள்ளவர்களை காட்டிக்கொடுக்கும் படியும் காட்டிக்கொடுத்தால் நீதிமன்றம் த்தில் கூட ஆஜர் படுத்தாமல் விடுதலை செய்கிறோம் என்று பகத் சிங்கிடம் பிரிட்டிஷ் அரசு பேரம் பேசியது.கடவுளை தொழுது உன்னை காப்பாற்றி கொள் என மிரட்டியது.
தான் நாத்திகனாக தொடர்வதா அல்லது பயந்து விடுதலை வேண்டி இறைவன் எனும் மாய உலகில் சரண் புகுவதா என ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றார் பகத்சிங் . ஆனால் தான் பெருமைக்காக நாத்திகவாதி ஆனவனோ தலைகனம் கொண்டவனோ அல்ல என இக்கட்டான சூழலிலும் தன் நிலையை மாறாமல் மனப்போராட்டத்தில் வென்று தன்னை நாத்திகனாக ஒரு பொருள் முதல்வாத எதார்த்தவாதியா நிலை நாட்டினார் பகத் சிங்.
மதம் ஒரு அபினி.அது நமது துன்ப துயரங்களில் சாந்த படுத்தி விடும் அவற்றிற்கான காரண காரியங்களை மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பதை மட்டுப்படுத்தும்.துன்ப துயரத்திலும் கஷ்டத்திலும் பயத்திலும் இருப்பவனுக்கு மதம் ஒரு ஆறுதல் தருகிறது. அந்த போலியான ஆறுதல் மனிதனை தன் விடுதலைக்காக போராடுவதில் இருந்து தடுத்து விடுகிறது
ஆனால் இங்கு பல்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டாலும் உருவாக்கினாலும் பகத்சிங்கின் மன உறுதியும் சோவியத்தின் புரட்சிகர நூல்களின் அறிவுமே பகத் சிங்கை வெறும் நாத்திகவாதியாக மட்டுமல்லாமல் பொருள் முதல்வாத எதார்த்தவாதியாக உருவாக்கியது.
இன்றைய இந்தியாவில் மதத்தை வைத்து மனிதர்களை பிளவு படுத்துவதன் மூலமும் அறிவியலுக்கு புறம்பான செயல்களை ஊக்குவிப்பதன் மூலமும் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பணவீக்கம் என ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார சீரழிவையும் மக்களிடம் இருந்து மறைத்து மக்கள் ஒரே புள்ளியில் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து விடாமல் மட்டுப்படுத்த பாஜக வகுப்புவாதத்தை கையாளுகிறது.
எனவே இவ்வேளையில் தன்னை மார்க்சிய நூல்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்களின் லட்சியத்தின் மூலமும் தன்னை பொருள் முதல்வாத எதார்த்தவாதி எனப்பிரகடன படுத்திக்கொண்ட பகத் சிங்கை வாசிப்போம்.
கட்டுரையாளர்: சேது சிவன் DYFI திண்டுக்கல் மாவட்ட பொருளாளர்