நான் படித்துக்கொண்டிருந்த போது கல்வி நோக்கத்திற்க்காகவும், நடப்பு விவகாரங்களை தெறிந்து கொள்வதற்காக அரசியல் நிகழ்வுகளை பின்பற்றியுள்ளேன். எனினும் நான் ஒருபோதும் அரசியல் மீது அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் எனது குடும்பத்தினர் அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். நான் 7 ஆம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் குடும்பத்தோடு விருமாண்டி படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படத்தில் திறக்கலைஞர் ரோஹினி கீழ்வெண்மணி பற்றி பேசுவார்.
எனக்கு வெண்மணி பற்றி கேள்வி எழுந்தது. நான் என் அப்பாவிடம் வெண்மணி பற்றி கேட்டேன். அவர் வெண்மணி வரலாற்று சம்பவம் பற்றி என்னிடம் விரிவாக சொன்னார். அதனை கேட்ட பிறகு ஒரு நாள் முழுவதும் நான் சோகமாக இருந்தேன். என்னால் தூங்க முடியவில்லை. அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக, குஜராத் கலவரங்கள், வாச்சாத்தி வழக்கு, போன்ற நிகழ்வுகள் பற்றி கேள்விப்பட்ட துவங்கினேன். கூடவே அந்த பிரச்சனைகளுக்கு காரணமான கட்சிகளின் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் அதிகரித்தது.
நான் பல கட்டுப்பாடுகளையும் விதிகளை கொண்ட ஒரு பாரம்பரியமான ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். குடும்பம் விதித்த தடைகளை நான் கேள்வி கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. குறிப்பாக மாதவிடாய் காலங்கள் தொடர்பாக நான் கேள்வி எழுப்பினேன். இந்த நடவடிக்கைள் என்னை எனது குடும்பத்திற்குள் ஒரு கிளர்ச்சியாளராக எனது பயணத்தை தூண்டியது.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் முதல் பெண்களை ஒடுக்கிய பல பிற்போக்கான சடங்குகள் மற்றும் மூடநம்பிக்கைகள் வரை அனைத்தையும் கேள்வி கேட்கத் துவங்கினேன். நான் எனது குடும்பத்தினருடன் கேள்வி கேட்டு வாதிடும்போது சவிதிரிபாய் புலே, ராஜா ராம் மோகன் ராய் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசுவேன். இந்த நடவடிக்கைகள் நான் ஒரு பிரச்சனைக்குரிய நபர் என எனது குடும்பத்தினர் முத்திரை குத்த வழிவகுத்தது. என்னைப் போன்ற ஒரு மகளை பெற்றதற்காக என் பெற்றோர் வெட்கப்பட்டனர்.
செய்திகளிலோ அல்லது எங்காவது சிவப்புக்கொடி இருந்தால் அதுபற்றி என் அப்பாவிடம் கேட்பேன். ஒருமுறை தெருவையே மூழ்க செய்யும் அளவுக்கு மக்கள் சிவப்பு கொடியை பிடித்து போராடுவதை பார்த்த போது நான் எனது அப்பாவிடம் அவர்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன். “அவர்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகள் அந்தக் கட்சி ஜோதி பாசு இருந்த வரைக்கும் நல்லா இருந்துச்சு. ஆனா இப்போ எல்லாம் கெட்டுப் போச்சு. கட்சி ஒண்ணுக்கும் லாயக்கில்ல” என அப்பா சொன்னார். A party thats good for nothing is protesting for people? How come it is a good for nothing party? அந்த கேள்வி மட்டும் என் மனதில் நிரந்தரமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் நான் ஒரு நண்பர் மூலம் பெரியார் மற்றும் அம்பேத்கரை தெரிந்துகொண்டேன். அவர்களது சில எழுத்துக்களை படியுங்கள் என அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் கூட, சமூக எதார்த்தத்திற்கும் அரசின் செயல்பாட்டிற்கும் இடையில் குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் பின்னணியில் ஒரு வேறுபாடு (இணைப்பு இல்லாததை ) இருப்பதை நான் உணர்ந்தேன் . எனக்கு பதில் கிடைக்காத பல கேள்விகள் இருந்தன.
ஆனால் எனது குடும்பத்தினர் அத்தகைய கட்சிகளுக்கு கொடுத்து வரும் ஒருதலைபட்சமான ஆதரவு எனக்கு அதிக குழப்பத்தை உருவாக்கியது. 2018 இல் பெண்களைப் பற்றிய ஒரு ஆய்வு செய்வதற்காக நான் தீவிரமாக படித்து வந்த போது நான் ஜனநாயக மாதர் சங்கத்தை (AIDWA) பற்றி தெரிந்து கொண்டேன். அப்போது தான் மைதிலி சிவராமன் பற்றி அறிந்து கொண்டேன்.
நான் சிறுவயதில் கேள்விப்பட்ட வெண்மணி சம்பவம் அன்று இருந்த அரசாங்கம் பண்ணையார்களுக்கு ஆதரவு கொடுத்து வந்தது எனவும் அந்த ஆதரவை பயன்படுத்தி அந்த பண்ணையார் நடத்திய சாதிய படுகொலை என்பதை அறிந்து எனது இதயம் உறைந்து போனது. ஆத்திரத்தில் இருந்தேன். மிக கடுமையாக கோபமடைந்தேன்.
அதன் பிறகு கொரோனா 2020 கொரோனா லாக் டவுன் வந்தது அப்போது தான் கிளப் கவுஸ் அறிமுகமானது, அதில் சிலர் மார்க்சியம், கம்யூனிசம் மற்றும் இடதுசாரி தத்துவங்கள் அரசியலை பற்றி பேசி விவாதிப்பார்கள் . அதே போல ட்விட்டர் ஸ்பேஸிலும் தமிழ் மார்க்ஸ் தளத்தில் மார்சியம் பற்றி விவாவதிப்பார்கள்.
இது கம்யூனிஸ்ட்கள் பற்றி எனக்கு ஒரு நல்ல புரிதலை கொடுக்க துவங்கியது. இறுதியாக அந்த விவாதங்களில் எனது கேள்விகளுக்கான பதில்களைக் கண்டு பிடித்தேன். சோசலிசம் மற்றும் இடதுசாரி அரசியல் மட்டுமே மக்களின் வாழ்க்கையை உண்மையிலேயே மேம்படுத்துவதற்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்குமான ஒரு சிறந்த மாற்று என்பதை நான் உணர்ந்தேன்.
இந்த பயணத்தின் மூலம், எனக்கு முன் சவால் விடும் வகையில் பல புத்தகங்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நான் ஒரு மார்க்சிய லெனிய கல்வி மூலம் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யத் துவங்கினேன். பெண்ணியம் குறித்த எனது நிலைப்பாட்டை கூட மறு மதிப்பீடு செய்தேன். அடையாள அரசியல் மூலம் இயங்கி வருகின்ற அமைப்புகளின் மீது மட்டு கவனம் செலுத்துவதை விட, நான் இப்போது தொழிலாளி வர்க்கத்திற்காக உறுதியாக நின்று வாதிடுகிறேன்.
நான் இப்போது சோசலிசம், மார்க்ஸ், சோவியத் யூனியன், இடதுசாரி தத்துவதத்தைப் பற்றி எனது புரிதலை ஆழப்படுத்தும் தேடலில் இருக்கிறேன். இவற்றின் வரலாறு, கோட்பாடுகள் மற்றும் சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகங்கள், பொருட்கள் மற்றும் வீடியோக்களை நான் ஆர்வமாக தேடிப்படிக்கின்றேன் பார்க்கிறேன்.
நான் உறுதியாக நம்புகிறேன், கம்யூனிசம் மட்டுமே தொழிலாளி வர்க்கத்திற்கான மாற்று!
-லாவண்யா