பதின்ம வயதுகள்ல இருந்தே திமுக தான் நமக்கு விருப்பமான கட்சி. நாத்திகம் முற்போக்கு பஸ்பாஸ்ன்னு நான் ஒரு சிலபஸே வச்சி பாலோவ் பண்ணிட்ருந்தன்.
அப்புறம் வேலைக்கு போனப்புறம் ஒரு recession ( பொருளாதார நெருக்கடி) வந்தது. என்னோட ப்ரெண்ட எங்க கம்பெனியில இருந்து பயர் பண்ணாங்க.
இத்தனைக்கும் அவங்க வேலைக்கு சேந்து ஒரு 6 மாசம் தான் இருக்கும். இது ஏன் இப்டி நடக்குதுன்னு யோசிச்சி பாத்தா நம்ம திராவிட கொள்கைல நம்மள கன்வின்ஸ் பண்ற அளவுக்கு ஆன்சர் இல்ல.
திராவிட கொள்கைகாரங்க கிட்ட கேட்டா பாப்பான் தான் அதுக்கு காரணம்ன்னு முடிப்பாங்க. இல்ல தக்கன பிழைக்கும்ன்னு முடிச்சிருவாங்க. வேலை பார்த்தாலுமே கூட நம்ம குடும்ப அமைப்பு முறை ஒரு சில அடக்குமுறைய நம்மட்ட நிகழ்த்தும். அதுக்கும் சரியான காரணம் கன்வின்ஸ் ஆகுற மாதிரி கிடைக்கல.
ட்விட்டர்ல சுத்திட்ருந்தன் அப்ப கம்யூனிஸ்ட்கள் நடமாட்டம்லாம் அவ்ளோ பாத்ததில்லை. கொக்கி, வக்கீல்ன்னு ஒரு ஐடி பேர் ஞாபகம் இல்லை. இதுல கொக்கி ஐடி கம்யூனிசம்லாம் செகன்டரி திமுகவ அடிக்கிறத பிரைமரியா வச்சிருந்தாரு.
கம்யூனிஸ்ட் நடத்திய போராட்டங்கள் வாச்சாத்தி , மாஞ்சோலை போராட்டம்ன்னு கம்யூனிஸ்டகளுக்கு போஸ்டர் ஒட்டிருந்தாங்க. இவங்க சொன்னத முதல்ல நம்பலை, வாச்சாத்தி பிரச்சனையில ஏன் திமுக மக்கள் பக்கம் நிக்கலைன்றத நம்பமுடியல.
பிரபலமான கேஸ்கள் எல்லாத்தையும் புரட்டி பாத்தா அதிமுக ஆட்சியில் திமுக எதிர்க்கட்சியா இருந்த அப்போ கூட திமுக, மக்களுக்கு உதவல. இதற்கு திமுக ஆதரவாளர்கள் வைத்த வாதத்தை பாத்தா அவதூறு தான் இருந்தது. அத்தோட திமுக பாசம் ஒடஞ்சிருச்சு..
அப்புறம் அப்டியே தமிழ்மார்க்ஸ் வந்து “குடும்பம் தனிச்சொத்து ” , “கூலி உழைப்பும் மூலதனமும்” வாசிச்சாங்க அதுல தான் எனக்கு இருந்த ரெண்டு முக்கியமான கேள்விக்கு ( குடும்ப அமைப்பு பெண்கள் மேல செலுத்தும் வன்முறை) ஒரு கன்வின்சங்கான பதில் இருந்தது. அதற்கப்புறமும் நிறைய, நம்ம தினமும் வாசிக்கிற நியூஸ்பேப்பர் கூட அதுல வர்க்க சார்பு. ஜியோபாலிடிக்ஸ் IMF world bank ஏகாதிபத்தியம் இன்னும் நிறைய சொல்லித்தந்தாங்க..
சொல்லித்தந்தாங்கன்றத விட அவங்க பேசிட்ருப்பாங்க நமக்கு எதாச்சும் சந்தேகம் வந்து கேட்டா பதில் சொல்வாங்க. இதுல ஒரு முக்கியமான விசயம் என்னன்னா gender neutrality. பெண்தானே அப்டின்ற மாதிரில்லாம் டீல் பண்ணமாட்டாங்க. எல்லாருமே தோழர் தான். அது விசயம் தெரிஞ்சிக்கிறதுக்கு ரொம்ப கன்வீனியன்ட்டா இருந்தது.
ஒரு ரெண்டு வருசம் இவங்க என்ன புத்தகம்லாம் வாசிக்கிறாங்க? ஒரு செய்திய எப்டி பாக்கணும்ன்னு அதுவரைக்கும் நான் ஒரு விசயத்தை பார்த்துக்கு ஒரு புது டைமன்சனா இருந்தது. இடதுசாரி அரசியல் மக்களுக்கான அரசியல்ன்னு தெரியவந்தது.
இப்பவும் தலித்கள், தொழிலாளர்கள், பெண்களுக்காக போராடுறது கம்யூனிஸ்ட்கள் மட்டும் தானு ஒரு நம்பிக்கை குடுக்குது. எளிய மக்கள் நிறைய பேருக்கு பெரிய வேலைலாம் பாத்துருக்காங்க எங்க ஊர்ல பீடிசுற்றல் தான் பிரதான தொழில் அவங்களுக்கு பென்சன் வாங்கி குடுத்தது கம்யூனிஸ்ட்கள். பென்சனோட அருமை என்னன்னு எங்ங ஊரு பெண்கள் கிட்ட கேக்கணும் நீங்க ♥️♥️
பூர்ணா முருகேஷ்