அம்பேத்கர் ஒரு முறை சொன்னார் Caste is “National Phenomenon with it’s regional characterstics” என்று. அதை என்னால் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இடதுசாரி தோழர்களோடு விவாதிக்க ஆரம்பித்த உடன் தான் தெரிய வந்தது, சாதியை இவ்வளவு நாள் நாம் மேம்போக்காக புரிந்து கொண்டு உள்ளோம் என்று.
சாதி என்பது கடவுள் நம்பிக்கையை தூக்கி போடுவது போல எறிந்து விட்டால் போற விஷயம் இல்லை. அது நமது நிலத்தில், பொருளாதாரத்தில், கல்வியில், வாழ்வில் கலந்த ஒரு விஷயம். அதைப்பற்றி புரிந்து கொள்ள நாம் ஆழ்ந்து படிக்கவும் வேண்டும், களத்தில் செயல்படவும் வேண்டும் என்று புரிந்து கொண்டது இடதுசாரி தோழர்களிடம் பேசும் போது தான்.
நான் இடதுசாரி தோழர்களிடம் சாதி பற்றி பேசும் போது அம்பேத்கர், பெரியார் எழுதியதைப் பற்றி மேலோட்டமாக சொல்வேன், தோழர்களிடம் மிக வீரியமாக சண்டையும் விடுவேன் அம்பேத்கர், பெரியார் ஒன்று. வேறு யாரும் இங்கு சாதியை எதிர்த்து சண்டையிட்டதில்லை என்று, அப்போது இடதுசாரி தோழர்கள் மிகவும் பொறுமையாக சாதியின் தோற்றம், வர்ணம், சாதியின் இன்றைய கால சூழ்நிலை பற்றியான விரிவான தகவல்களை தந்தனர். அது மட்டும் இல்லாத பல வரலாற்று ஆய்வு அறிஞர்களான டிடி.கோசாம்பே, சட்டோ பாத்தியா, ஆர் எஸ் ஷர்மா, ரொமிலா தாப்பர் போன்ற ஆய்வு அறிஞர்களை அறிமுகப்படுத்தினர்.
இதெல்லாம் ஓர் அளவுக்கு நுனிப்புல் மேய்வதை போல் மேய்ந்து விட்டு, அதெல்லாம் சரி களத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது தான் சொன்னார்கள் ” Dalit Shoshan Mukti Munch ” பற்றி சொன்னார்கள், அதைப் பற்றி தேடி படிக்கும்போது தான் தெரிய வந்தது சாதி என்ற கொடுமைகளுக்கும்,சமூக நீதியை காப்பாற்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கி இருக்கிறார்கள் கம்யூனிஸ்டுகள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் எந்த கட்சியும் எந்த இயக்கமும் இந்த மாதிரி அமைப்பை கட்டவில்லை.
நான் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா அம்பேத்கர் சொன்னது என்று ” Caste is National Phenomenon with its regional Characteratics” என்று அதோட அர்த்தம் எனக்கு இப்போது புரிய வந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் இயங்கும் DSMM, தமிழ்நாட்டில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அதாவது TamilNadu Untouchability Eradication Front என்ற பெயரில் களத்தில் எத்தனை எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்று இருக்கிறது.
இதையெல்லாம் படித்து விட்டு தோழர்களிடம் கேட்டபோது இந்த மகத்தான தியாகிகளை நீங்கள் முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டபோது கம்யூனிஸ்டுகள் தியாகம் என்பது ஒன்றா இரண்டா என்று சொல்லிவிட்டு எங்கள் தியாகங்கள் உங்களை வழிநடத்துவதை விட எங்கள் marxiya சித்தாந்தம் உங்களை வழிநடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
2007 வாக்கில் தான் TNUef வருகிறது, அதற்கு முன் கம்யூனிஸ்டுகள் சாதி பிரச்சனையில் தலையிடவில்லையா என்று பொது புத்தியில் நிணைப்பது போல் நினைத்து இருந்தேன். அப்போது பி சீனிவாச ராவ் தன் வரலாறு படித்துக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஒரு விஷயம் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கூலி உயர்வு போராட்டம் பெரிதாக நடந்த கொண்டிருந்த நேரம், தோழர் சீனிவாச ராவ் அங்கு கூட்டம் போட சென்று இருப்பார். கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை பக்கத்து கிராமங்களில் சொல்லி அனுப்ப ஒரு கடிதம் எழுதி மற்றொரு நபரிடம் கொடுத்து அனுப்பி பக்கத்து ஊரில் கொடுத்துவிட்டு வா என்றார்.
அவர் போய் வெகு நேரம் ஆளைக் காணோம் என்ன என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் சொன்னார் ஐயா நாங்க தலித்துங்க நாங்க ஊர் தெருல நடக்க முடியாது. ஊர் தெருவில் சைக்கிள் ஓட்ட முடியாது. அப்படி செஞ்சா தீட்டுங்க என்று சொல்லி இருப்பார்.
உடனே சீனிவாச ராவ் மற்றவர் அனைத்து போராட்டங்களுளைம் தள்ளி வைத்துவிட்டு இந்த போராட்டத்தை முதலில் கையில் எடுத்து தலித் மக்கள் ஊர் தெருவில் நடந்து செல்ல, சைக்கிள் ஓட்ட, துண்டை தோளில் போட்டு செல்ல உரிமையை பெற்றுக் கொடுத்தார்.
அப்போது ஒன்று புரிந்து கொண்டேன் கம்யூனிஸ்டுகளுக்கு சாதி புரிதல் இல்லை என்று சொல்பவர்களிடம் எனக்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். “சாதியின் ஆதி காலம் முதல் இன்று வரை அதைப்பற்றிய தொடர் ஆராய்ச்சியில் இருப்பது கம்யூனிஸ்டுகள் மட்டுமே. அது மட்டும் இல்லாமல் என்னை பொறுத்தவரை களத்தில் ஒரு சாதியை கொடுமை நிகழ்கிறது என்றால் அதில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போராடுவது தான் சாதியை பற்றி சிறந்த புரிதல் அந்த வேலையை கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்து செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் கம்யூனிஸ்டுகள் தவிர வேறு எவருக்கும் சாதிய புரிதல் இல்லை.”
சாதியைப் பற்றி,சாதிய அடக்குமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள ஒரு முக்கியமான புத்தகம் இருக்கிறது தோழர் சம்பத் எழுதிய “சாதி,வர்க்கம் விடுதலை” என்ற புத்தகம் அதில் தமிழ்நாட்டில் எத்தனை விதமான தீண்டாமைகள் இருக்கின்றன என்பதை மாவட்ட ரீதியாக தொகுத்து சொல்லி இருப்பார். இவ்வளவு விதமான தீண்டாமைகள் இந்த மண்ணில் புறையோடி இருக்கிறதா என்று ஆச்சரியம் உங்களுக்கு நேரிடலாம். அதனால் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் அது.
இப்போது இருக்கும் நவ தாராளமய காலத்தில் சொந்த பந்தங்களை பண உறவுகளாக பார்க்கும் இந்த காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஒரு பெரும் தியாகத்தை இந்த மண்ணில் விதைத்துள்ளனர்.
இவ்வளவு ஆழ்ந்த படிப்பிற்கு பின்பும் ஆழ்ந்த விவாதங்களுக்கு பின்பும் தான் ஒரு முடிவுக்கு வந்தேன். அது என்ன முடிவென்றால், தெலுங்கானாவிலும், கீழ்வெண்மனியிலும், சாம்சங் தொழிலாளர் போராட்டத்திலும் அந்த தொழிலாளர்கள் சொன்ன ஒற்றை கோஷம் செங்கோடியை கீழே இறக்க மாட்டோம் என்பதுதான். அந்த போராளிகள் போல் நானும் ஏற்றுக் கொண்டேன்.
மகத்தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிற “மக்கள் ஜனநாயக புரட்சி” உருவாக என்றென்றும் கம்யூனிஸ்ட் தோழர்களுடன் தோழராக இருந்து செயல்படுவேன் இறுதிவரை.
Socialism is the Only Hope.
தோழர் குத்தூசி