எதிர்க்கட்சியாக இருந்தபோது உள்கட்டமைப்புத் திட்டங்களாக உள்ள சாலை விரிவாக்க உள்ளிட்ட திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை கடுமையாக எதிர்த்து வந்த திமுக தற்போது அந்த திட்டங்களுக்கு நேர் எதிராக படு வேகமாக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
2015 ஆம் ஆண்டு பாஜக அரசின் நில கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து திமுக மாநிலம் தழுவிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தது.மேலும் சென்னை-சேலம் விரைவுச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முன்கூட்டியே விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கடுமையாகக் கண்டித்தவர் அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அதனோடு இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த முனைவதை கைவிட்டு விட்டு , இது தொடர்பாக வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார். மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த மாற்று வழி காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எதிர்கட்சி தலைவராக இருந்த போது அவர் முன் வைத்த கோரிக்கைகளை முதல்வர் ஆனா பிறகு நிலம் கையகப்படுத்துவதில் முறையாக பின்பற்றுகிறாரா?
திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எங்கள் ஆட்சி சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிரானது அல்ல என்று மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.மேலும் நாங்கள் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் விவசாயிகள் எழுப்பும் கவலைகளை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றே திமுக குறிப்பிட்டது என்றார்.
சரி அதை தற்போது பின்பற்றினார்களா ?
சென்னை-சேலம் விரைவுச் சாலை மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது மட்டுமல்லாமல் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது குறித்தும் தற்போது திமுக மவுனம் காத்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டத்திற்காக நிலம் வழங்கும் கிராம மக்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பை விட அதிக இழப்பீடு தொகை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
மேலும்,அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் அரசால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்றும், நீர்நிலைகளை கண்காணித்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இருப்பினும், மக்கள் இடம்பெயர்ந்து விட்ட பிறகு நீர்நிலைகள் இருந்து என்ன பயன் என்று உள்ளூர் கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதே போல் 2006 மற்றும் 2011 க்கு இடையில் திமுக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (SEZs) நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்த போது இதேபோன்ற எதிர்ப்பை தமிழ்நாட்டில் சந்தித்தது. அப்போது திமுக தலைவரும் முதல்வருமான கலைஞர் கருணாநிதி “விவசாய நிலத்தின் மதிப்பை விட வழங்கப்படும் இழப்பீடு அதிகமாக இருந்தாலும், தொழில் நிறுவன போட்டி இல்லாமல் போயிருந்தால் வழங்கப்படும் இந்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு குறைவாக இருக்கும் என பாருங்கள் என நியாயப்படுத்தி விளக்கி ‘உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதினார்.
நீங்கள் சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள் , தொழில்துறை போட்டி இல்லாமல் இருந்திருந்தால் நிலத்தின் மதிப்பு என்னவாக இருந்திருக்கும் (குறைவாக இருந்திருக்கும் ) என்பதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று நோபல் பரிசு பெற்ற திரு.அமர்த்தியா சென் பரிந்துரைத்திருந்ததை மேற்கொள் காட்டி இருந்தார்.
இதே போல மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் சிங்கூரில் தொழில் நிறுவனங்கள் துவங்க நிலம் கையகப்படுத்தபட்ட பொது நிலத்தை விட முறையாக சில மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்பட்டது அதை சரி என்றும் நியாமானது என்றும் அப்போது டெலிகிராப் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் அமிர்தியாசென் தெரிவித்தார். மேலும் தொழில் நிறுவனங்கள் வந்ததாலேயே இந்த அளவிற்கு நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் வாறு இல்லையென்றால் முன்பு இருந்த மதிப்பே அதிகமானது என இருந்திருக்கும் என்றார் அதை மேற்க்கோள் காட்டி அமைச்சர் தங்கம் தென்னரசும் பரந்தூர் போராட்ட குழுவினரிடம் பேசினார்.
தொழில்கள் வளர்ச்சியின் பாதையாக இருக்கும் அதே வேளையில், 1960-களில் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்த பிறகு தொழில் வளர்ச்சி குறித்து திமுக நிறுவனர் முன்னாள் முதல்வர்ஆனால் திமுக என்ன செய்கிறது ?
பிராந்திய முதலாளிகளின் விருப்பத்தை கட்டுப்படுத்தாமல், உரிமைகேட்கும் மக்களிடம் செல்லாமல் அவர்களின் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு முறையாக பதில் சொல்ல துணியால் அவர்கள் மீது மீது குண்டர் சட்டத்தை போட்டும் போராடமாட்டோம் என மிரட்டி பொய்ச்சொல்லி கையெழுத்து வங்கியும் ஒட்டு மொத்த தமிழக மக்களிடமும் அதிருப்தியை சம்பாதித்து கொண்டுள்ளது.
நன்றி இந்து நாளிதழில்
கோபாலன்