ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் (தீவிரமான வானிலையால்) இயற்கை பேரழிவுகளால் ஒவ்வொரு நாளும் 2,923 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
கடும் குளிர் , புயல், மின்னல்கள், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட காரணங்களால் 18.4 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும் 80,563 வீடுகளும் அழிந்துள்ளன.
இந்த இயற்கை பேரிடர்களால் பீகாரில் 642 நபர்களும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 365 நபர்களும் உத்தர பரதேசத்தில் 345 நபர்களுக்கு உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் 15,407 வீடுகள் இந்த இயற்கை பேரிடர்களால் அழிந்துள்ளன என்று அறிக்கை விவரிக்கிறது.

மேலும் கடந்த ஒன்பது மாதத்தில் கிட்டத்தட்ட 92,519 கால்நடைகளைக் உயிரிழந்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் மிக அதிகமாக 63,649 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்தியா 2023: தீவிர வானிலை நிகழ்வுகளின் மதிப்பீடு’ என்ற இந்த அறிக்கை ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை, அதாவது 273 நாட்களில், அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 235 நாட்கள் அதாவது சுமார் 86% நாட்கள் தீவிரமான வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என காட்டுகிறது.
https://www.https://www.cseindia.org/india-2023-extreme-weather-events-11973
பருவமழைக்கு முந்தைய காலத்தில், 92 நாட்களில் 85 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்த காலத்தில், இடி, மின்னல்கள் மற்றும் புயல்கள் மட்டும் சுமார் 79 நாட்களுக்கு பதிவாகியுள்ளன, மேலும் 28 நாட்களில் வெப்ப அலைகள் பதிவாகியுள்ளன. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் 16 நாட்களில் தீவிர நிலைக்கு சென்றுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
குளிர்காலமான ஜனவரி மாதம் சராசரி வெப்பநிலை மிதமாக இருந்தது, ஆனால் பிப்ரவரி மாதம் சராசரியான 1.36 டிகிரி செல்சியசை விட 0.50 செல்சியஸ் அதிகரித்து 1.86 டிகிரி செல்சியஸ் உயர்ந்தது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 13% மற்றும் 68% மழை பற்றாக்குறை ஏற்பட்டதால் வழக்கத்தை விட வறண்ட நிலை நிலவியது.ஆனால் அந்த இரண்டு மாதங்களில், 59 நாட்களில் 28 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகளைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
பருவமழைக்கு முந்தைய காலத்தில், 92 நாட்களில் 85 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்த காலகட்டத்தில், மின்னல் மற்றும் புயல்கள் மட்டுமே 79 நாட்களில் பதிவாகியுள்ளன, வெப்ப அலைகள் 28 நாட்கள் பதிவாகியுள்ளன.
கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் 16 நாட்கள் தீவிர நிலையில் இருந்தன. பருவமழை இயல்பானதை விட ஒரு வாரம் தாமதமாக ஜூன் 8 ஆம் தேதி துவங்கியது, ஆனால் ஜூன் 30 ஆம் தேதிக்குள் முழு நாடும் விரைவாக பரவியது . உண்மையில், இது வழக்கத்தை விட 15 நாட்களுக்கு முன்னதாகவே நிகழ்ந்தது என்று அறிக்கை காட்டுகிறது.