அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க உலகளாவிய ஆலோசனை நிறுவங்களை நியமிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்.


2023 இறுதி வாரத்தில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு விஷன் 2047 எனும் திட்டத்தை முன்வைத்து அதை இந்திய அரசு பாஸ்டன் ஆலோசனை குழுவை பணியமர்த்தியுள்ளதாக சில ஊடங்ககள் தெரிவித்தன.
அடுத்த கால் நூற்றாண்டில் இந்தியாவை வளர்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்காக சில இலக்குகள் மற்றும் முன்னுரிமையை வடிவமைக்கும் வகையில் ஆட்சி நிர்வாக அமைப்புகளையும் பொது சொத்துக்களை அணுகுவதையும் மேம்படுத்தும் ஆலோசனைகளையும் இந்த நிறுவனம் வழங்கும்.
இந்த பாஸ்டன் நிறுவனம் உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனமாகும்.

வணிகம் மற்றும் சமுக தலைவர்களுடன் இனைந்து மிக முக்கியமான சவால்களை சமாளிக்க செயல்படுவதாக அந்நிறுவனம் தன வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.மேலும் இந்நிறுவனம் மெக்கின்ஸி மற்றும் பெயின் & கம்பெனியை உள்ளடக்கிய பிக் த்ரீ நிறுவனங்களுள் ஒன்றாகும்.

நிர்வாக மேலாண்மை மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றில் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவது,சில நேரங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது நிதி திட்டமிடல் போன்றவற்றிலும் ஒரு நிலையான செயல்முறையை கொண்டுள்ளது.தார்போட்டு பொது சமூகத்திற்குள் வந்து அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவது இந்நிறுவனத்தின் நீட்சியாக உள்ளது.

உலகளவில் இவ்வாறான தனியார் ஆலோசனை நிறுவனங்களால் அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆலோசனை சேவைகளின் வரலாறு என்பது மோசமான ஆலோசனைகள் அதனால் தோல்விகள், அரசின் மீது தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம் (செல்வாக்கு) செலுத்துதல் மற்றும் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் சிறப்பு திறன்களையும் மற்றும் அறிவையும் அழித்தது ஆகியவற்றையே கொண்டுள்ளது.

இந்த தனியார் ஆலோசனை நிறுவனங்களின் அனுபவமும் வரலாறும் இந்த நிறுவனங்களின் உதவியை கேட்ட நாடுகள் மிக மோசமான பேரழிவுகளை சந்தித்துள்ளனர் என்பதை நிரூபிப்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.இத்தகைய நிறுவனங்களை அரசின் திட்ட வடிவமைப்பில் ஈடுபடுத்துவது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் தேசிய நபர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரணங்களையும் இந்த கட்டுரை.

முதன்மையான கேள்வி இதுதான் இந்த தனியார் நிறுவனங்கள் உண்மையிலேயே சிறந்த முடிவுகளை தருகின்றனவா?

தனியார் நிறுவனங்களின் நியமிப்பதற்காக வணிகம் கல்வித்துறை மற்றும் இதழியல் துறையில் உள்ள பல அறிஞர்கள் வழங்கும் ஆலோசனையின் உண்மை மதிப்பை கண்டறிவது கடினம் என்றும் எனவே ஆலோசனை நிறுவனங்கள் முக்கியமாக ஆலோசனை தரும் வேலையை செய்கிறார்கள் இது அவர்களுக்கு ப்ரோ போனோம் வேலைமதிப்பின் தோற்றத்தை உருவாக்குவதில் அக்கறை கொண்டுள்ளன என்றும் பல காலமாக வாதிடுகின்றனர்.

இந்த நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?


சர்வதேச அளவில் செயல்படும் இந்த நிறுவனங்கள் முதலில் அவர்கள் குறி வைக்கும் நாடுகளில் உள்ள நிறுவனங்களின் தலைமை அலுவலகம் அல்லது அதன் அமைப்புகளின் கிளைகளுடன் இணைந்து செயல்படுகின்றன.
நாட்டிற்கு நுழைந்த பிறகு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை அணுகி இலவசமாக ஆலோசனை தரும் வேலையை செய்கிறார்கள். இது அவர்களுக்கு பாரோ போனோ (pro bono ) எதிர்கால முதலீடு.
முதலில் அவர்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை புரிந்து கொள்கிறார்கள் இதன் மூலம் எளிதாக அதற்குள் நுழைகிறார்கள் இரண்டு அவர்கள் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுடன் தொடர்பை வலுவாக உருவாக்குகிறார்கள்.

இந்த தனியார் நிறுவனங்களை அரசமைப்பிற்குள் கொண்டு வர மூத்த அதிகாரிகள் எடுக்கும் முயற்சிக்கு இந்த நிறுவனங்கள் அவர்களின் ஒய்வுக்கு பின் பாதுகாபு பலன்களையும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் அரசு துறையின் மூத்த அதிகாரிகள் தனியார் நிறுவனங்களை அரசுத் துறைக்குல் நுழைவதை எளிதாக்குகின்றனர். சலுகைகள் மிக நுட்பமாகவும் உணர்த்தும் விதத்திலும் செய்து கொடுக்கப்படுகிறது அதிகாரியுடன் ஒரு சகோதரத்துவத்தை உருவாக்கி எதிர்காலத்தில் நண்பர்களுக்கு உதவக்கூடிய ஒரு உணர்வை உருவாகின்றனர்.

அதற்குப் பிறகு அந்தத் துறைகளில் திறனானது பிரச்சனையை தீர்க்கும் அளவில் இல்லை எனவும் எனவே புதிய சிந்தனையையும் புதிய ரத்தத்தையும் குறைக்கும் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டு தனியா நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
பிறகு புதிய ரத்தத்தை ஆட்சேர்ப்பு செய்ய அவர்கள் பரிந்துரைப்பார்கள் மற்றும் பெரும்பாலும் அவர்கள் நிர்ணயிக்கும் ஊதியத்தில் தங்கள் சொந்த ஆட்களை சேர்த்து கொண்டு அவர்களை அசோசியேட்களாக வைத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அரசுடன் நிரந்தர அங்கமாகி விடுகிறார்கள். பிறகு அமெரிக்க டாலர் சந்ததி மதிப்பிற்கு ஏற்ப அரசாங்கத்தின் தலையில் பில்லை கட்டி விடுகிறார்கள். நிச்சயமாக அரசாங்கமும் இந்த பிள்ளை வழங்க தூங்கும் இது பெரும்பாலும் அர்த்த சம்பளத்தில் அரசாங்கத்தில் தொடர்ந்து பணிசெய்யும் தேர்தல் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும்.இது பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட துறையின் அறிவையும் சிதைக்கும்.

இந்த ஆலோசனை நிறுவனங்கள் ஆலோசனை வழங்க சிறந்த நுட்பங்களையும் உத்திகளையும் கொன்றுள்ளன என்று ஒருவர் நம்பலாம்.

ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. தொழில்துலையில் பயன்படுத்தப்படும் பல மாதிரிகளை (தோல்வி அடைந்த மாதிரி களையும்) இறக்குமதி செய்கின்றன. மேலும் அவை திட்ட வரலாறுகள் (முந்தைய கால ஒப்பந்தங்களை) பற்றிய தகவல்களை தொகுத்து விநியோகிக்கும்நவீன அமைப்புகளை மட்டுமே கொண்டுள்ளன.

அதாவது நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கொண்ட புதிய ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் என இந்த நிறுவனங்கள் முந்தைய கால திட்ட வரலாறுகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன அதாவது மறுசுழற்சி செய்யகின்றன. அவர்கள் மார்க்கெட்டிங் திறன்கள் மற்றும் ஏராளமான பாவர் பாயிண்ட் விளக்க கட்சிகள் மூலம் தங்களது மதிப்பீடு மற்றும் தீர்வுகளை ஒருபோதும் சந்தேகிக்காத வகையில் அதிகளவு தரவுகளுடன் தங்கள் வாடிக்கையாளர்களை மூழ்கடிக்கிறார்கள். அவர்களை கேள்வி கேட்டது அறியாமை அல்லது முட்டாள்தனமானது என்னும் நிலை உருவாக்கப்படுகிறது.


இந்த உலகளாவிய நிறுவனங்கள் அரசிற்கு அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் ஊது குழலாக இருந்து அவுட்சோர்சிங் செய்ய பரிந்துரை வழங்குகின்றன.
அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் போது எல்லா வகையிலும் அவுட்சோர்சிங் செய்ய அரசாங்கத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி திணிக்கப்படுகிறது.


ஒரு வேளை அவர்களின் ஆலோசனையால் அரசின் திட்டம் தோல்வியுற்றால் அவர்கள் அரசின் தலையீட்டின் போதாமை செலவின்மை மற்றும் திட்டத்து செயல்படுத்த போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை என்று அரசை குற்றம் சாட்டுவார்கள் அந்த தோல்வி அவர்களால் ஏற்பட்டது என ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
பிக் 3 நிறுவனங்கள் பல நாடுகளுக்கு பேரழிவு ஏற்படுத்தும் ஆலோசனைகள் பரிந்துரைத்ததால் ஏற்பட்ட முக்கிய விளைவுகளை பார்க்கலாம்.

அவுட் சோர்சிங் (வேலைகள் தனியார் மயம்)

இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கங்கள் டிஜிட்டல் மையமாக்களுக்கு வழிவகுத்தன. அரசாங்க சீர்திருத்தங்கள் அவர்களின் தகவல் தொழில்நுட்ப உட் கட்டமைப்பின் பெரும் பகுதியை நிர்வகித்தல் மற்றும் சேவை செய்வதை உள்ளடக்கியது இது அவுட்சோர்சிங்கிற்கு படிப்படியாக மாற்றப்பட்டது.

நெதர்லாந்து ஜப்பான் மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளில் இந்த நிறுவனங்கள் அவுட்சோர்சிங்கை பிறந்திருக்கும் வரை விரிவான திறன்களை உள்நாட்டில் வைத்திருந்தன டென்மார்க்கில் தனியார் மையமாக்கப்படும் வரை அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு சிறந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பும் மேலாண்மை மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைக் கொண்டிருந்தது.

இன்று அந்த நாடுகளிடமிருந்த திறன்கள் அளிக்கப்பட்டு விட்டன அல்லது இலக்கப்பட வைக்கப்பட்டுள்ளன தனியார் மையம் அவர்களுக்கான வாதமாக பொதுத்துறை நிறுவனங்களிடம் திறமை இல்லை என முன்வைக்கப்படுகிறது. அரசு வேலை வாய்ப்புகள் குறைந்த ஊதியம் வழங்குவதால் திறமையானவர்களை கவரவில்லை எனவும் தனியார் துறையில் புதுமைகளும் உற்பத்தி திறனும் அதிகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

மதிப்பு அடிப்படையிலான சீர்திருத்தங்கள் அல்லது ஆட்குறைப்பு

இந்த நிறுவனங்கள் முன்வைக்கும் கவர்ச்சிகரமான முன்மொழிவுகளில் ஒன்று மதிப்பு அடிப்படையிலான சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அரசாங்கத்திற்கு செலவை குறைக்கிறோம் என்பதாகும். இது பற்றாக்குறையை குறைக்க அரசாங்கங்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு பிரபலமான தனியார் நிறுவனங்களால் இத்தகைய பரிந்துரை ஒரு நல்ல சாக்காக அமைகிறது ஆட்குறைப்பு ஒரு நிறுவனத்தின் கற்றல் ஆற்றலை கடுமையாக பாதிக்கிறது.


மற்றொரு முன்மொழிவு திறன் நீக்கம் என்ற ஆட்குறைப்பு (ஒரு வேலை செய்வதற்கு தேவையான திறன் அளவை குறைத்தல்)
பல ஆண்டுகளாக பெறப்பட்ட திறன் மற்றும் அறிவை இந்த முன்மொழிவு இழக்க செய்கிறது. அரசு நிறுவனத்தின் கற்றல் திறனை பாதிக்கிறது மற்றும் இத்தகைய ஆட்குறைப்பு பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவை ஸ்வீட்டிஸ் பொது மருத்துவமனை மற்றும் போட்டோ ரிக்கோ ஆகிய நிறுவனங்களின் திறன் இழப்புகளுக்கு வழிவகுத்தது.


எதிர்பார்க்கப்படும் செலவு குறைப்புக்கு பதிலாக இந்த நிறுவனங்கள் பணம் கொட்டும் நிறுவனங்களாக மாறிவிட்டன. ஒரு காலத்தில் மலிவான வேலையில் சிறந்த மருத்துவ வசதியை வழங்கிய nks (nya karolinska solna) மருத்துவ மனையை ஸ்வீடன் மக்கள் தற்போது உலகின் மிக விலை உயர்ந்த மருத்துவமனை என்று அழைக்கின்றனர். மதிப்பு அடிப்படையிலான சீர்திருத்தங்களின் முக்கிய அங்கமாகும். இது மிக குறைந்த பேரம் பேசும் சக்தியுடன் வேலை படி நிலையில் உள்ளவர்களில் சம்பளம் மற்றும் ஊதியங்களை குறைப்பதன் மூலம் அடையப்படுகிறது.
அமெரிக்காவில் ஆட்குறைப்பு மிகப் பிரபலமாக உள்ளது ஆனால் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்வதால் தவிர்க்கப்படும் செலவுகள் காலப்போக்கில் சமூகப் பாதுகாப்பு மகள்களை கட்ட வேண்டிய ஒரு சுமை அமெரிக்க அரசுக்கு ஏற்படுகிறது.


அமெரிக்காவில் ஆட்குறைப்பு மிகப் பிரபலமாக உள்ளது ஆனால் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்வதால் தவிர்க்கப்படும் செலவுகள் காலப்போக்கில் சமூகப் பாதுகாப்பு மகள்களை கட்ட வேண்டிய ஒரு சுமை அமெரிக்க அரசுக்கு ஏற்படுகிறது.


தேசிய பாதுகாப்புக்கு தொடர் முரண்பாடு
அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனங்களை ஒப்பந்தம் செய்வது ஒரு தொடர் மோதலை ஏற்படுகிறது கன்சல்டன்சிகள் அரசாங்கங்களுடன் வேலை செய்யும் போது தனியார் துறை வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்கால ஒப்பந்தங்களை பெற விரும்புவதால் தொடர் பிரச்சினைகள் எழுகின்றன.

அரசு வணிகத்தை விட தனியார் துறை மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது.மேலும் அரசாங்கத்திற்கு பொருளாதார முடிவு எடுக்கும் குழுவில் இடம் பெறுவதால் இந்த ஆலோசனை நிறுவனங்கள் அடுத்ததாக ஆலோசனை வழங்க இருக்கும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்க தகவல்கள் நிறைந்த நல்ல ஆதாரமாகும்.

மேலும் ஆலோசனை நிறுவனங்களில் பல்வேறு நாடுகளில் சேர்ந்தவர்கள் உள்ளனர் மற்ற திட்டங்களுக்கு கூட்டாளிகளாக பயன்படுத்தப்படுவதற்காக அவர்களே காக்க வைத்திருக்கும் நிலமையும் கவலைக்குரியது. மேலும் இதனால் வெளியிடப்படாத ஒப்பந்தங்கள் கசிவதை தடுக்க முடியாது.

ஜனநாயகத்திற்கு ஆபத்து
ஆலோசனைத் துறை பொதுமக்களை பாதுகாப்பதற்காக இருக்கும் ஜனநாயக விதிகளுக்கு முரணாக உள்ளது. ஆலோசனைத் துறையின் ஒளி புகா நிலை ஒன்றும் புதிதல்ல
அரசாங்கத்தை முடிவெடுக்க வைப்பதில் இந்த ஆலோசனை நிறுவனங்கள் செலுத்தும் ஆதிக்கம் பொதுமக்களுக்கு தெரியாமல் நடக்கிறது இதில் வெளிப்படை தன்மை இல்லை.


அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான இந்த கார்ப்பரேட் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்வது ஒரு தொடர் முரண்பாடுகளை ஏற்படுகிறது. கன்சல்டன்ஷிகள் அரசாங்கங்களுடன் வேலை செய்வதால் தனியார் துறையில் வாடிக்கையாளர்களிடமிருந்து எதிர்கால ஒப்பந்தங்களை பெற விரும்புவதால் இந்த தொடர் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

முடிவுரை

அரசின் ஆலோசனை திட்டங்களால் கன்சல்டிங் தொழில் பெரிதும் பயனடைந்துள்ளது திரட்டப்பட்ட பெரிய முதலீடுகள் தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பின் மதிப்பு அல்லது அதீ உருவாக்கும் அபாயத்தில் கள் ஆகியவற்றுடன் பொருந்தவில்லை.

பொது நலனுக்கான பொருளாதாரங்களை மாற்ற தேவையான அளவு தடுக்கின்றன ஆலோசனை நிறுவனங்கள் புதுத்துறை நிறுவனங்களை கைப்பற்றி திறன்களை மட்டுமல்லாது பொது சேவை நோக்கத்தையும் அதற்கான உணர்வையும் அழித்து விட்டன.

தோல்விகளுக்கான வழியை தவிர்ப்பதற்காகவே ஆலோசனை நிறுவனங்கள் பெரும்பாலும் அரசாங்கங்களால் நியமிக்கப் படுகிறார்கள். எனவே நிதித் தோல்விகளுக்கான அனைத்து பொறுப்பும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Dangers of Outsourcing Government Planning to Global Consulting Firms – Gopi Karunakaran , News click & The Leaflet

மொழிபெயர்ப்பு

தோழர் சேது சிவன்

Leave a Reply