நாட்டின் வளர்ச்சிக்கான வேலை நேரம் எது?

இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயணன் கூறிய பிறகு அது பெரும் பேசுபொருளானது.

நாராயணன் மட்டுமல்ல நாராயணனை போன்று உழைப்பாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுக்க வேண்டும் என்று பல முதலாளிகள் பலமுறை இது குறித்து பேசியிருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததை ஈடுகட்ட 64 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருந்தது.

தற்போது என்னவோ 70 மணி நேரம் வேலை செய்யாதது போல இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மத்திய பிரதேஷ் உத்தர பிரதேஷ் ராஜஸ்தான் குஜராத் ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களே தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுக்கும் வகையில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி விட்டன.

இவர்களுக்கெல்லாம் முறையான ஊதியம் கொடுக்கப்படுகிறதா? அந்த தொழிலாளர்களின் வாழ்க்கை நலன் பாதுகாக்கப்படுகிறதா? தொழிலாளியின் குடும்பத்திற்கான மருத்துவ இன்சூரன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதா ? அவர்களுடைய எதிர்கால பண பலன்கள் என்ன ? இதற்கெல்லாம் இந்த நாராயணனும் நாராயணனை போன்று வாய் பேசுபவர்களும் எந்த பதிலும் கூற மாட்டார்கள்.

மேலே நேரத்தை 12 மணி நேரமாக மாற்றிய பிறகு தொழிற்சாலைகள் இரண்டு ஷிப்டுகளாக இயங்கத் துவங்கின.இதனால் வேலைவாய்ப்புகளும் பெருமளவில் குறைய தொடங்கியது. புதிய பணிய நியமனம் என்பது முடக்கப்பட்டது.

இதுபோன்ற வேலை நேர அதிகரிப்பு இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் பல முதலாளிகளாலும் அரசுகளாலும் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் பிரான்ஸ் ஜெர்மனி நகர்லாந்து உள்ளிட்ட வளர்ந்த முதலாளித்துவ நாடுகளே ஆண்டுக்கு 1500 க்கும் குறைவான வேலை நேரத்தை தான் பின்பற்றுகின்றன.

வாரத்திற்கு 36 முதல் 40 மணி நேர வேலைநேரமாக சீனா மற்றும் தென்கொரியாவில் பின்பற்றப்பட்டு முறையால் தொழிலாளர்கள் சிறந்த உற்பத்தியை கொடுக்கிறார்கள் என்றும் இதனால் நாட்டின் வளர்ச்சியும் தொழில்நுட்பமும் சிறந்த இடத்தில் உள்ளது என முதலாளித்துவ நாடுகளே கூறுகின்றன.

முதலாளித்துவா நாடான தென்கொரியா ஒரு வாரத்தில் 40 மணி நேரம் வேலை நேரமாக நியமித்துள்ளது ( including over time)

சீன மற்றும் தென்கொரியாவின் இந்த வேலை நேரம் வரை நல்ல பலனைத் தந்ததையடுத்து பல முதலாளித்துவ நாடுகளும் அதை பின்பற்ற தொடங்கியுள்ளன.

அறிவியல் ரீதியாக குறைந்த வேலை நேரம் இளைஞர்களை வேலையின் பக்கம் ஈர்த்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாகி உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கிறது. வேலை நேரம் போக தங்கள் குடும்பத்திற்கான நேரத்தையும் உடல் நலனுக்காகவும் நேரம் செலவிடப்படுவதால் வேலைப்பளு மனநல பிரச்சனை அல்லது உடல் நல குறைபாடுகள் எதுவும் இன்றி தொழிலாளர்களால் நல்ல உற்பத்தியை கொடுக்க முடிகிறது.
அதிக வேலை நேரத்தை விட குறைந்த வேலை நேரம் சிறந்த திறன் உடையதாக இருக்கிறது.

இந்த முறையில் அதிகளவிலான பெண்கள் தொழிலாளர்களாக உற்பத்தி துறையில் இணைய வழிவகுக்கிறது.மற்றும் வேலை வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்தியாவில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறும் போது அதனால் ஏற்படும் பாதிப்புகளை மறந்து விட்டு பேசுகிறார்கள்.

இந்தியாவில் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் முன் வைக்கும் காரணம் அதிக வேலை நேரம் அதிக உற்பத்தியை கொடுத்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள்.

மற்றும் அதிக வேலை நேரத்தில் தொழிலாளர்களின் அதிக உழைப்பை எடுப்பதன் மூலம் அதிக உற்பத்தியை தரமுடியும் என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பங்கள் எதிலும் முறையான முதலீடுகள் செய்யாமல் இருப்பது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியாவை ஒரு போட்டி நாடாக கூட ஒப்பிட முடியாது சூழல் தான் உருவாகும்.

இந்த நிலையில் வேலை நேரத்தை அதிகரித்து உற்பத்தியை பெருக்கினால் நாடு முன்னேறும் என்ற வாதம் அறிவற்ற வாதமாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு 163 நாடுகளில் எடுத்த ஆய்வின் படி இந்தியாவில் சராசரியாக ஒரு தொழிலாளி வாரத்திற்கு 47.7 மணி நேரம் பணி செய்கிறார் என காட்டுகிறது.இது சீனா (46.1) அமெரிக்கா (36.4) இஸ்லாமிய நாடான அரபு (52.6) தென் கொரியா (37.9) இங்கிலாந்து (35.8) ஸ்வீடன் (35.2), சுவிட்சர்லாந்து (34.4) ஜெர்மனி (34.3)கனடா(32.1) பிரான்ஸ் (30.1) ஆகிய நாடுகளை விட மிக அதிகம்..

(இந்த பட்டியலில் சீனாவை தவிர மற்ற நாடுகளில் தொழிலாளியின் அடிப்படை உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு மற்றும் ஊதியத்தின் நிபந்தனைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கப்படுவது இல்லை என்பதும் உள்ளது)

இத்தகைய சூழலில் இந்தியாவில் வேலை நேரத்தை உயர்த்துவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.அதற்கு பதிலாக உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இந்த மோசமான பணி நிலமைகள் மற்றும் அதிக வேலை நேரத்தின் காரணமாக இந்திய தொழிலாளர்கள் ஒரு‌ மணி நேரத்திற்கு 724 ரூபாய் ( 8.7 அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள உற்பத்தி மட்டுமே கொடுக்கிறார்கள்.இது உலக சராசரி உற்பத்தியான 1581 ரூபாயை (19 அமெரிக்க டாலர்கள்) விட 50 சதவீதம் குறைவு.

இவற்றோடு குறைந்த வேலை நேரத்தை வைத்திருக்கும் நாடுகளுடன் ஒப்பிட்டால் ஒரு மணி நேரத்திற்கு சீனா 1123.47 ரூபாய் ($13.5), அமெரிக்கா 5883 ரூபாய் ( $70.7),இலங்கை 1381.46 ரூபாய் ($16.6) , ஜப்பான் 3295 ரூபாய் ($39.6) தென் கொரியா 3453 ரூபாய் ($41.5) என்ற அளவில் உற்பத்தியை தருகின்றன.

இந்த நிலையில் முதலாளிகளுக்கு ஏற்ற வகையில் வேலை நேரத்தை வாரத்திற்கு 65 அல்லது 70 என அதிகரித்து கொண்டே சென்றால் அது இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகமாக பாதிக்கும்.மேலும் வழங்கப்பட்டு வரும் குறைந்த ஊதியம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை மோசமான பொருளாதார சூழலுக்கு தள்ளும்.

உற்பத்தி திறனை அதிகரிக்க நினைக்கும் எந்த ஒரு அரசும் வேலை நேரத்தை அதிகரிப்பதை விட அறிவியல் தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு தங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் ‌வளர்ச்சி திட்டங்களுக்கான எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முதலீடுகளும் இல்லாமல் இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரிக்க எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் செயலும் தொழிலாளி வர்க்கத்திற்கு விரோதமாகவும் நாட்டின் பொருளாதார பாதிக்கக்கூடிய தரமற்ற உற்பத்திக்கே வழி வகுக்கும்

தமிழ் மார்க்ஸ்

Leave a Reply