1848-ம் ஆண்டு வெளியிடப்பட்ட கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கையில் கம்யூனிசத்தின் எதிர்காலத்திற்கான வரைபடங்களை எதுவும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் வழங்கவில்லை. ஆனால் முதலாளித்துவம் நிரந்தரமானதல்ல. அது செயற்கையானது என்பதை மார்க்சும் ஏங்கெல்ஸும் நிகழ்கால நெருக்கடிகள் மூலம் எவ்வாறு நமது எதிர்கால விடுதலைக்கு வழிவகுக்கும் என விளக்கினர். வருங்காலம் குறித்து குறிப்பிடாத கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் அது தங்களுக்குள்ளே இருப்பவை என்றும் அதை பகுப்பது முரண் என்றும் விளக்கினர். எனவே நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஒரு இருமையை நிறுவுவதில் அர்த்தமில்லை.
இந்த இருவேறுபாட்டினை நியாயப்படுத்தினால், அது நாமே தண்டனைகளை ஏற்றுக்கொள்வதற்கு சமம் என்றனர். அதற்குப்பதிலாக அறிக்கை நாம் தீர்க்கக்கூடிய பணிகளைச் செய்யச் சொல்கிறது. மேலும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் “நாம்” என்று குறிப்பிடுவது தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் கூட்டும் அல்ல. மாறாக பொருளாதார செயல்முறைகளால் தீர்மானிக்கப்படும் வர்க்கம்.
அறிக்கையானது அரசியல் செயல்பாட்டின் முக்கிய ஆவணமாகும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்ட முக்கியமான தேதியை (பிப்ரவரி 21, 1848), வரலாற்றில் நமது (தொழிலாளர்களின்) முதலாவது மற்றும் உறுதியான நுழைவை நமக்கு நினைவூட்டுகிறது என்று பொருள்முதல்வாத தத்துவஞானி அன்டோனியோ லாப்ரியோலா 1895-இல் எழுதினார். இந்நாளிற்கு எதிராகத்தான் புதிய சகாப்தத்தின் மலர்ச்சியை, எழுச்சியையும் போக்கையும் அளவிடமுடியும். இப்படித்தான் இந்த புதிய சகாப்தமானது நிகழ்காலத்திலிருந்து, உள்ளார்ந்த வளர்ச்சியின் மூலம், அவசியமான மற்றும் தவிர்க்க முடியாத பாணியில் வளர்ந்தது.
லாபிரியோலாவை பொறுத்த வரை, கம்யூனிசத்தின் தற்காலிக தன்மைக்கான திட்டம் தெளிவாக இருந்தது. கடந்த காலத்தால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்காலத்தில் அது தனது எதிர்காலத்தை கொண்டிருந்தது. ஆனால் வரலாற்றில் கம்யூனிஸ்ட் அறிக்கை அத்தனை எளிதில் இடம்பெறவில்லை;
மார்க்சும் ஏங்கெல்சும் அறிக்கையை டிசம்பர் 1847-இல் எழுதினார்கள், அப்போது மார்க்சுக்கு இருபத்தொன்பது வயதும், ஏங்கெல்சுக்கு இருபத்தியேழுமே ஆகும். ஐரோப்பா கண்டத்திற்கு உலகம் அவர்களின் அடிவானமாக இருந்தது. பேரரசுகள், முடியாட்சி ஆதிக்கம் மற்றும் பயமுறுத்தும் தாராளவாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூக வர்க்கத்தின் கிளர்ச்சி என இந்த முதலாளித்துவத்திற்கு எதிராக பல புரட்சிகள் வெடித்தன. 1847 மற்றும் 1849 ஆண்டுகளுக்கு இடையில், புரட்சிக்கான நம்பிக்கை குடியரசுக்கட்சியினர், சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், அராஜகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவை அனைத்தும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் எழுச்சியைத் தூண்டும் நோக்கத்துடன் அணிதிரட்டப்பட்டன. ரோமானியக் குடியரசின் (1849) அடக்குமுறையிலும் மூன்றாம் நெப்போலியன் (1851) சர்வாதிகாரத்திலும் முடிவடைந்த, இந்த இரண்டு ஆண்டுகால ஜனநாயகப் போராட்டத்தில் கியூசெப் மஸ்ஸினி மற்றும் லூயிஸ் பிளாங்க், பியர் ஜோசப் புருத்தோன் மற்றும் மிகைல் பக்கூனின் ஆகியோர் மைய கதாநாயகர்களாக இருந்தனர். இவையே அரசியல் நடவடிக்கையின் பங்கு குறித்த மார்க்சின் அணுகுமுறையை மாற்றியது.
கம்யூனிஸ்ட்டாக மாறுதல்
“மார்க்சும் ஏங்கெல்சும் எப்படி கம்யூனிசத்திற்கு வந்தார்கள்?” 1842-ம் ஆண்டின் இறுதியில் ஏங்கெல்ஸ் ஏற்கனவே தன்னை “கம்யூனிஸ்ட்” என்று அழைத்தார். சில மாதங்களுக்குப் பிறகு மார்க்சும் அதையே பின்பற்றினார். அப்போது அவர்கள் வாழ்ந்த ஜெர்மனியில் கூட அவர்கள் அதனை முதலில் பின்பற்றவில்லை.
பதினெட்டாம் நூற்றாண்டில் முன்னேற்றம் பற்றிய பல்வேறு யோசனைகள் பல நாடுகளில் விதைக்கப்பட்டது. ஜெர்மி பெந்தமின்னின் பயன்வாதம் பிரெஞ்சு பொருள் முதல்வாதத்திற்கும் ஆங்கில கற்பனாவாதத்திற்கும் இடையே ஒரு பாலத்தை வழங்கியது. உண்மையில், வில்லியம் காட்வின், ராபர்ட் ஓவன் மற்றும் வில்லியம் தாம்சன் ஆகியோரின் கருத்துக்கள் மிகவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. 1849-இல் மார்க்ஸ் லண்டனுக்கு குடிபெயர்ந்தபோது அராஜகவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.
இந்த யுகத்தின் குறிப்பிடத்தக்க தாக்கங்களில் பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாத மானுடவியலாளர்கள் (பெர்னார்ட்டி மாண்டேவில்லே) மற்றும் பொருளாதார வல்லுநர்கள் (ஆடம் ஸ்மித்) கோட்பாடுகள் ஆகியவை அடங்கும். சோசலிஸ்ட்டாக இல்லாவிட்டாலும், சமூக மற்றும் அரசியல் அமைப்புகளுக்கு இடையே உள்ள கூட்டுவாழ்வு தொடர்பு பற்றிய விழிப்புணர்வில் பெரும் பங்களிப்பை வழங்கிய ஜீன் ஜாக் ரூசோ முக்கியமானவர். ஜஸ்ட்டிஸ் லீக் அமைப்பு 1830-களில் நிறுவப்பட்டது. அதில் பாரிஸில் இருந்தவர்களில் ஜெர்மன் நாடு கடத்தப்பட்டவர்கள் (மார்க்ஸ்உட்பட) ஒரு பகுதியாக இருந்தனர். கம்யூனிஸ்ட் லீக் 1847-இல் லண்டனில் பிறந்தது. இது ஆங்கில மற்றும் கான்டினென்டல் புரட்சிகர இயக்கங்களுக்கு இடையேயான பலவருட ஒருங்கிணைப்பின் பலனாக இருந்து வந்தது.
கம்யூனிஸ்ட் லீக் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸிடமிருந்து ஒரு அறிக்கையை நியமித்தது அவர்கள் அந்த நேரத்தில் தங்களை தீவிரஜனநாயகவாதிகளாகக் கருதினர் மற்றும் அரசியல் விடுதலைக்கான அனைத்து இயக்கங்களையும் ஆதரித்தனர். சார்ட்டிஸ்ட்கள் போன்ற இயக்கங்கள் உட்பட 1843-ல் ரைனிஸ் சேஜெய்டுங்குடன் பணிபுரிந்ததற்காக 1843-ல் பிரஷிய அரசாங்கத்தால் மார்க்ஸ் மீது சுமத்தப்பட்ட பிரதான குற்றச்சாட்டாக ஜனநாயக தீவிரவாதம் இருந்தது. அவரது அதிக ஜனநாயக கருத்துக்கள் பிரஷ்ய அரசின் கொள்கைகளுடன் முற்றிலும் முரண்படுகின்றன என்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை கூறுகிறது. இருப்பினும், மனிஃபெஸ்டோவில், பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்களின் கருத்துக்கள் கடந்த காலத்தின் ஒரு அத்தியாயத்தை சேர்ந்தவை. அவர்கள் எழுதும் கட்சி பொதுக்கருத்தை தூண்டும் திறன் கொண்ட கருப்பொருளின் அடிப்படையில் நிறுவப்பட்ட திறந்தவெளியில்மேற்கொள்ளப்படும் அரசியல் செயல்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது.
வரலாற்றின் பொருள்முதல்வாத விளக்கத்திற்கு மார்க்ஸ் சேர்க்கும் ஹெகலிய இயங்கியல் கம்யூனிசத்தை தவிர்க்க முடியாத இடமாக மாற்றுகிறது. “ஸ்பெக்டர்” என்பது மறுக்கவோ அல்லது மாற்றவோ முடியாத ஒரு எதார்த்தத்தை குறிக்கிறது. முதலாளித்துவத்தை அதன் நாட்களின் இறுதிவரை துன்புறுத்தும்.
அரசியல் ரீதியாக புரட்சிகர நோக்கங்களுடன் சமூகத்தின் வரலாற்றின் அறிவியல் விளக்கத்தை அறிக்கை இணைக்கிறது. மேலும் புரட்சிகர இயக்கம் வெற்றியடையும் பட்சத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் உள்ளடக்கியது. இவை அனைத்தும் ஒரு நடுத்தரகால இலக்கு (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) மற்றும் நீண்டகால இலக்கு (அரசு மற்றும் கம்யூனிச அரசு உதிர்ந்து போவது) நோக்கிய அரசியல் நடவடிக்கையின் கூட்டுத்திசையில் உள்ள நம்பிக்கையின் கீழ் உள்ளது. கட்சிக்கு பாட்டாளி வர்க்கம் என்ற குறிப்பிட்ட வர்க்கம் உள்ளது. ஆனால் எந்த வகுப்பையும் தாண்டிய ஒரு விடுதலைதான் இறுதி இலக்கு. தனிமனிதனின் உணர்தலில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இந்த வர்க்கத்தின் தனித்துவமான புரட்சிகரமான நிலைமைகளை ஈர்க்கும் பாணி பற்றி விவரிக்கின்றனர்.
வாதங்கள் வரலாற்றின் பொருள்முதல்வாத கருத்தாக்கத்தின் மூலம் நிரூபிக்கப்படுகின்றன. இது ஏன் இந்த பாட்டாளி வர்க்கம் மட்டுமே அடிப்படை புரட்சிகர வர்க்கம் என்பதை நிரூபிக்கிறது. விரோத வர்க்கம், முதலாளித்துவம் புரட்சிகரமானது மற்றும் அவர்களுடன் இணைந்து ஒரு புதிய கலாச்சாரம், தொழில்நுட்பம், சிவில் மற்றும் அரசியல் உறவுகளை உருவாக்கியுள்ளது. அதன் மூலம் சமூகத்தை புரட்சிகரமாக்கி மரபுகள், மதநம்பிக்கைகள், மற்றும் சாதியபடிநிலைகள், அரசின் முறையை மாற்றி, உலகமயமாக்கப்பட்ட ஒன்றுபட்ட உலகில் மனிதகுலத்தை மூழ்கடிக்கிறது.
ஆனால் முதலாளித்துவம் தனது சொந்த நலன்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே புரட்சிகரமாக இருக்கிறது. அது பொருளாதார மற்றும் சமூக நடைமுறையில் அவர்களால் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் மூலம் சட்டமென்று அறிவிப்பவர்களை அடிபணிய வைப்பது.
பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியால் உருவாக்கப்பட்டது. அதன் முழுமையான அடிபணிதல் நிபந்தனையின் மூலம் ஒன்றுபட்டது. இது எந்தவொரு குறிப்பிட்ட முதலாளித்துவ அல்லது தொழில்துறையின் விருப்பத்தால் ஏற்பட்டது அல்ல. மாறாக முதலாளிகள் மற்றும் பாட்டாளிகள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் அதன் தாக்கத்தை திணிக்கும் முதலாளித்துவ உற்பத்திமுறையின் மூலம் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. முதலாளித்துவத்தை தார்மீகக் கண்ணோட்டத்தில் அல்லது பாரபட்சமற்ற மற்றும் நீதியின் கொள்கைகளின்படி மதிப்பிடமுடியாது. சொந்த தர்க்கத்தின்படி இது ஒரு ஒத்திசைவான அமைப்பாகும், எனவே அதை நியாயப்படுத்த முடியாது.
கூலிநிலைப்பாடு என்பது ஒருவரின் சொந்த வேலையை செய்யாமல் உழைக்க வேண்டியதன் அவசியம் மேலும், பாட்டாளிவர்க்கத்தை ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறையும் தங்கியிருக்கும் விடுதலை மற்றும் நீதியின் உலகளாவிய செயல்பாட்டைக் கொண்ட ஒரே வர்க்கமாக ஆக்குகிறது. இழப்பதற்கு எதுவுமே இல்லாத, பாதுகாப்பதற்கு ஒன்றும் இல்லாத ஒரு வர்க்கம், இறுதியில் முதலாளித்துவக்குவிப்பு என்ற இரும்புச் சட்டத்தில் இருந்து முதலாளித்துவ வர்க்கம் உட்பட அனைவரையும் விடுவிக்கும்.
இரண்டு அத்தியாயங்கள்
அறிக்கை எங்களுக்கு இரண்டு விதமான எதிர்காலங்களை வழங்குகிறது. முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றிய முதல் அத்தியாயம் முதலாளித்துவ காலத்தை குறிக்கிறது. இரண்டாம் அத்தியாயத்தில் கம்யூனிசத்துக்காக பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை பார்க்கிறோம். இந்த இரண்டு எதிர்காலங்களில், முதலாவது நமது நிகழ்காலத்துடன் ஒத்துப்போகிறது. இரண்டாவது எதிர்காலம் மற்றும் மாற்றம் பற்றிய யோசனையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்காலம்.
நாம் ஒரு நித்திய நிகழ்காலத்தில் வாழ்கிறோம். அவை அதிகரித்துவரும் வேகத்துடன் மீண்டும் மீண்டும் வருகிறது. இன்று நாம் “பென்சீதனித்துவம்”, “நிகழ்காலம்” மற்றும் “வரலாற்றின்முடிவு” பற்றி பேசும்போது இதுவே மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது. இன்றைய அறிக்கையின் முதலாளித்துவ நிகழ்காலத்தின் விரிவாக்கம் எதிர்காலத்தை விழுங்கிவிட்டதாகத் தோன்றும் அமைப்பின் உலகளாவிய மாற்றத்தின் ஒரு அத்தியாயம்.
வெற்றிகரமான உலகளாவிய முதலாளித்துவம் உலகிற்கு ஒரு மொழி, ஒற்றை அழகியல் மற்றும் தார்மீக கலாச்சாரத்தை வழங்குகிறது. இது எல்லைகள், மரபுகள் மற்றும் அரசியல் இறையாண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களின் இயக்கத்துடன் அழித்து மாண்டெவில்லுக்கும் மார்க்ஸுக்கும் இடையிலான வழியில் நம்மைவிட்டுச் செல்கிறது. இரண்டு ஆசிரியர்களுக்கும், சிவில் சமூகம் சமத்துவமின்மையால் முன்னேற்றம் மற்றும் செழுமைப் படுத்துதலில் இருந்து வழி வழியாக உள்ளது. இரண்டின்படி, சாராம்சத்தில் உரிமைகளின் கலாச்சாரம் என்பது குடிமை வாழ்விலிருந்து விடுபட்ட மகத்தான செயல்பாட்டை மட்டுமே கொண்டுள்ளது, அங்கு தனியார் தீமைகளே செழித்தோங்க முடியும்.
மாண்டேவில்லின் தேனீக்களின் கட்டுக்கதையில், 1723-ல் செல்வம் தவிர்க்க முடியாத ஏழ்மையிலிருந்தும், செழிப்பிலிருந்து சம்பளம் பெறும் உழைப்பிலிருந்தும் பிறக்கிறது. மேலும் ஒரு தேசத்தின் ஆரோக்கியம், அழகு மற்றும் கலாச்சாரம் ஆடம்பரப் பொருட்களில் ஈடுபடுவதைப் பற்றி சிந்திக்காமல் தங்களைத் தாங்களே சோர்வடையச் செய்யும் ஏழ்மையில் இருந்து அளவிடப்படுகிறது. இந்நாகரீகம் (மதம் போன்றது) ஒருவரின் சொந்த துயரத்திற்கு அப்பால் எதுவும் இல்லை என்ற உணர்வை வலுப்படுத்துவதை தவிர வேறு எதையும் செய்யாது.
உண்மையில், நிகழ்காலத்திடம் உள்ள எதிர்காலம் பற்றிய உறுதி இல்லாமல், நிகழ்காலம் நமது சாபக்கேடாக மாறுகிறது. ஏனென்றால் முதலாளித்துவம் நமக்கு அதிர்ஷ்டம், லாட்டரி மூலம் மட்டுமே முடியும் என்ற ஒரே நம்பிக்கையைத் தருகிறது. அறிக்கையானது அதிர்ஷ்டத்தின் மீதான இந்த நம்பிக்கையை வெறுக்கத்தக்க வகையில் தூக்கியெறிந்து, கிரானைட் நிச்சயமான வடிவத்தில் மேன்டிவில்க்கு மாற்றாக முன்மொழிகிறது. நமக்கு ஒரு எதிர்காலம் இருக்கும். ஆனால் எந்த பாதையில், எந்த முறையில், எந்த கருவிகளுடன்? அறிக்கையில் எழுதப்பட்ட புரட்சிகளின் தோல்வி, அரசியல் போராட்டம் மற்றும் அணிதிரட்டலின் செயல் திறன் குறித்து மார்க்ஸுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் வரலாற்றின் திசையில் இல்லை.
இந்த தோல்விக்குப் பிறகு (1871-ல் பாரிஸ் கம்யூனின் அடுத்தடுத்த தோல்வி), எதிர்காலத்தின் உறுதியானது வேறுபட்ட பாதையைப் பின்பற்ற அதிகவிலையை கொடுத்தது. மார்க்ஸின் அடுத்தடுத்த எழுத்துக்களில், ஒரு புரட்சிகரமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வர்க்கத்தால் கட்சி எதிர்காலம் வித்திடப்படாது. நித்தியமாகத் தோன்றும் நமது நிகழ்காலம் நமக்குக் கொடுக்கும் முன்னோக்கு இதுதான்; எந்த அரசியல் நல்லொழுக்கமும் எதிர்காலத்தின் வாயில்களைத் திறக்க முடியாது, ஆனால் நம்பிக்கையை இழக்காமல் இருக்க நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும், ஏனென்றால் வரலாறு அனைத்தும் “திருப்பங்கள் மற்றும் தலைகீழ்மாற்றங்களால் நிறைந்துள்ளது”.
வரலாறுதான் தீர்மானிக்கும்.
அறிக்கையின் முதல் அத்தியாயத்தின் இந்த நித்திய நிகழ்காலத்தில், எங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. மாண்டேவில் அல்லது மார்க்ஸ் அதாவது, மனிதஇயல்பு மாறாததால் முடிவில்லாமல் திரும்ப வரும் சுரண்டல் மற்றும் செழுமையின் கதை அல்லது சுரண்டல் மற்றும் குவிப்பு ஆகியவற்றின் கதை மீண்டும் வராது.
ரூசோ எழுதியது போல், மனிதர்கள் தங்களைத் தாங்களே முழுமைப்படுத்திக் கொள்ள உதவ முடியாது. அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் சொந்த இயல்பையும் விஷயங்களின் போக்கையும் சீர்குலைக்கிறார்கள் அதன் மூலம் முன்கூட்டியே திட்டமிடாமல், அமைப்பில் சிக்கல்களை உருவாக்குகிறார்கள். எனவே, இரண்டாவது அத்தியாயம் எதிர்காலத்தின் போக்கை தீர்மானிக்க ஒரு சுருக்கமான அரசியல் வடிவமைப்பு இல்லாமல் கூட விவரங்கள் இருப்பது உண்மைதான்.
சிதறிய தீப்பொறிகள் பல பெரிய நெருப்பை உண்டாக்கும் என நாம் ட்ரேரம் நேட்சுராவில் படிக்கிறோம். இது மார்க்ஸால் விரும்பப்பட்ட, நன்கு அறியப்பட்ட உரை.
ஆங்கில மொழியாக்கம்: ஜாக்கோபின்