லெனினின் இறுதி நாட்கள்
நகரங்களிலும், கிராமங்களிலும் வானொலிப் பெட்டிகளின் வழியாக ஜனவரி 27 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு இவ்வாறாக அறிவிப்பு வெளியிடப்பட்டது:
எழுந்து நில்லுங்கள் தோழர்களே! லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்..

ஆம் அந்த ஒப்பற்ற மாவீரன்,பாட்டளிகளின் படைத்தலைவன்,இந்த பூவுலகின் முதல் சோசலிச சமூகத்தை படைத்தவன்,மார்க்சின் மாணவன்,ரஷ்யாவின் தலையெழுத்தை மாற்ற முதல் கையெழுத்து இட்டதன் மூலமாக அடுத்த சில வருடங்களிலேயே உலக மக்களின் மூன்றில் ஒரு பகுதி மக்களின் வாழ்வையும் அந்த கையெழுத்து மாற்ற போகிறதென அவன் நினைத்தானோ இல்லையோ அது அவ்வாறே நடந்தும் முடிந்தது. அந்த மனித குலத்தின் மாபெரும் கனவாம் சமூக சமத்துவ சமுதாயத்தை பாட்டாளிகளால் வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கையை உலகுக்கு பறைசாற்றியவன் ஜனவரி 27-ஆம் திகதி லட்சோப லட்ச பாட்டாளிகளின் சூடான கண்ணீரில் கழுவப்பட்டு நல் அடக்கம் செய்யப்பட்டார்..
லெனினின் வாழ்க்கை
1870 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி பிறந்த “விளாதிமிர் இலியிச்’’ தனது அண்ணண் அலெக்சாந்தரின் படு கொலைக்கு பிறகு அரசியல் குறித்த அறிவை பெற்று ரஷ்யாவின் விடுதலை குறித்து சிந்திக்களானார். 1887 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த விளாதிமிர் அன்றைய மாணவர்கள் கலகத்தின் மூலம் அரசியலில் முதல் அடி எடுத்து வைத்தார். இதனால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட லெனின் தனது மேல் படிப்பான சட்டம் பயில்வது தடை செய்யப்பட்டதை குறித்து கவலைக் கொண்டாலும் சோர்ந்து போகவில்லை. கல்லூரியில் இடம் இல்லை என்றால் என்ன? நான்காண்டு சட்ட படிப்பை ஒன்றரை ஆண்டுகளில் சுயமாகவே கற்றுத் தேர்ந்தார். பிறகு தேர்வெழுதி வெற்றியும் பெற்றார்.
1891 ஆம் ஆண்டு தனது தங்கையின் இறப்பிற்கு பிறகு சமாரா நகர் சென்ற விளாதிமிர் அங்கேதான் “காரல் மார்க்சின்” போதனைகளை ஆழ்ந்து கற்களானார்.அதன் பிறகு சமாராவில் செயல்பட்ட மார்க்சிய குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு மார்க்சின் போதனைகளை பரப்பவும், விளக்கவும் தொடங்கினார். அன்றிலிருந்து ஜார் அரசின் எதிரியாக விளாதிமிர் கருதப்பட்டு ஒற்றர்களின் தேடுதல்களின் வலையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
1893 ஆம் ஆண்டு பீட்டர்ஸ்பர்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தது விளாதிமிரின் குடும்பம். அந்த நகரம் தொழிற்சாலைகள் நிரம்பிய நகரமாதலால் அங்கே அரசியல் வேலை செய்வதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் விளாதிமிர். சில தொழிலார்களோடு சேர்ந்து “போராட்டசங்கம்” ஆரம்பிக்கபட்டது. இங்கிருந்தே ஆரம்பமானது விலாதிமிரின் புரட்சிகர வாழ்க்கை…அங்கேயே லெனினும் பிறந்தார்.

லெனினின் புரட்சிகர வாழ்க்கை
அதன் பிறகான லெனின் வாழ்க்கை முழுக்க முழுக்க புரட்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது..சைபீரிய சிறைவாசம் ,தலை மறைவு வாழ்க்கை,மாறு வேடத்தில் சுற்றுவது, நொடி கூட வீனாகக் கூடாது என்ற லெனினின் கட்டுப்பாடான தன்னுறுதியின் மூலமாக ரஷ்யாவில் நடைபெற்றுவந்த போராட்டங்களை குறித்து தெறிந்துக்கொள்வதும் தனது ஆழ்ந்த புலமையின் வாயிலாக போராட்டத்தை வழி நடத்தவும் செய்தார்..ஜார் அரசிடம் இருந்து தப்பி கட்சியையும்,தொழிலாளர்களையும் வழி நடத்த லெனின் தலை மறைவாகவே வாழ வேண்டியிருந்தது.அவர் தனது வாழ் நாளின் பெரும் பகுதியை ரஷ்யாவிற்கு வெளியேதான் கழித்தார்..இதனால் தொழிலாளர்களை அரசியல்படுத்த பத்திரிக்கையை தொடங்க முடிவு செய்தார் லெனின். ஜாரின் ரஷ்யாவில் மார்க்சிய பத்திரிக்கையா?எனவே வெளிநாடுகளில் அச்சிட்டு ஜாரின் ரஷ்யாவிற்குள்ளே கொண்டுவர லெனின் முடிவு செய்தார்.பத்திரிக்கை வாயிலாக தனது புரட்சிகர கருத்துக்களை தொழிலாளர்க்ளிடையே பரப்பினார் லெனின்…எனவேதான் லெனின் பத்திரிக்கையின் முக்கியத்துவம் குறித்து வெளியிட்ட கருத்து இன்றளவும் கம்யூனிஸ்டுகளிடம் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது: “பத்திரிக்கை என்பது பிரட்சாரம் செய்வதோடும், கிளர்ச்சி ஊட்டுதோடும் மட்டும் அல்லாமல் மேலும் அது மக்களையும்,தொழிலாளர்களையும் ஒருங்கிணைக்கிறது” என்று லெனின் கூறினார்..
1905 ஆம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தவுடன் மீண்டும் ரஸ்யாவிலிருந்து வெளியேற வேண்டிய சூழலில் லெனின் பின்லாந்து,பிரான்ஸ்,ஸ்விசர்லாந்து என பல நாடுகளின் வாழ நேரிட்டது.அங்கேயெல்லாம் இருந்த ருஸ்ய ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி புரட்சிக்கான வேளையில் தீவிரமானார்.1907 ஆம் ஆண்டு லெனினை கொன்று பிடிக்க ஜார் உத்தரவு இட்டான்…1910 ஆம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நடந்த கூட்டத்தில் லெனின் இவ்வாறு கூறினார்:
1905 ஆம் ஆண்டு புடட்சி தோல்வி அடைந்துவிட்டதென சோர்ந்து போக கூடாது.துணிவுடன் முண்ணே செல்ல வேண்டும்..நமது பாதை புரட்சி பாதை..
1911 ஆம் ஆண்டு ப்ரான்ஸ் நாட்டில் உள்ள லோன்ழுமோ கிராமத்திற்கு குடியேறிய லெனின் அங்கே இருந்த எண்ணற்ற ருஸ்ய விடுதலை போராட்ட வீரர்களை ஒருங்கினைத்து கட்சி கல்வியை போதித்தார்.அதை தொடர்ந்து 1914 ஆம் ஆண்டு போலிஷ் நகரத்திற்கு மாறினார்..அப்போதுதான் முதல் உலக யுத்தம் தொடங்கியது..லெனினை ரஸ்யாவின் உளவாளி என கைது செய்த ஆஸ்த்திரிய அரசு அவரை கொன்றுவிட முடிவு செய்தனர்.ஆனால் எப்படியோ தோழர்களின் உதவியுடன் லெனின் சிறையிலிருந்து வெளியே கொண்டுவரப் பட்டார்.அதன் பிறகு அங்கிருந்து ஸ்விசர்லாந்து சென்றனர்.ஸ்விசர்லாந்து முதல் உலகப்போரில் கலந்துக்கொள்ளவில்லை ஆதலால் அங்கே லெனின் வசிப்பதில் சிக்கல் இல்லாமல் இருந்தது…
ஜார் ஆட்சியில் ருஸ்யாவை விட்டு வெளியேற்றப்பட்ட பல அரசியல் கைதிகள்,ருஸ்ய தொழிலாளர்கள் என எல்லோரும் லெனினை போலவே பல நாடுகளிலும் இருந்தார்கள்.அதே போல ஸ்விஸ் நாட்டிலும் இருந்தார்கள்.அவர்களை இணைத்துக்கொண்டு லெனின் “போர் எதிர்ப்பு போர்” என்ற முழக்கத்தை முன்வைத்து ரஸ்ய பாட்டாளிகளையும் மக்களையும் போராட அறைகூவினார்..அன்றைய கூட்டத்தில் பேசிய லெனின்;
“ருஸ்ய மக்கள் மீதும் மற்ற நாட்டு மக்கள் மீதும் யுத்தம் என்ற த்டீர் விபத்து சுமத்தப்பட்டிருக்கிறது .யுத்தத்தால் யாருக்கு லாபம்?முதலாளிகளுக்கு மட்டுமே. போரில் கோடி கோடியாய் பணம் குவிப்பார்கள்,மேலும் மேலும் லபம் பெரும் நோக்கத்துடன் அவர்கள் புதிய புதிய நாடுகளை கைப்பற்றிக் கொள்ளப் போரிடுகிறார்கள்.படை வீரர்களையும் தொழிலாளர்களையும் ‘தாய் நாட்டை காக்கப் போரடுங்கள்’ எனக் கூறி ஏமாற்றுகிறார்கள்.உண்மையில் இது தாய் நாட்டை காப்பது அல்ல,முதலாளிகளின் லாபங்களை காப்பதே ஆகும்.எனவே ‘உங்கள் கைகளில் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன.எல்லா நாடுகளையும் சேர்ந்த படை வீரர்களே,பாட்டாளிகளே ஆயுதங்களை உங்கள் அரசர்களுக்கு,முதலாளிகளுக்கு எதிராக திருப்புங்கள்,புரட்சி செய்யுங்கள்.நியாம் அற்ற போர் ஒழிக!’ போர் எதிர்ப்பு போர் நடத்துவோம்.” என்ற செய்தியை ரஸ்யாவிற்கு உடனடியாக அனுப்பிய லெனின் அதை போர் முனையில் இருக்கும் போல்ஸ்விக்குகளிடமும்,மக்களிடமும்,தொழிலாளர்களிடமும் பரப்பச்சொன்னார்..
1917 பிப்ரவரியில் ரஸ்யாவில் பாட்டாளிகளின் உதவியோடு முதலாளித்துவ வர்க்கம் புரட்சி நடத்தி ஆட்சியை பிடித்ததை அறிந்த லெனின் உடனடியாக ரஸ்யா திரும்பி சொசலிச சொவியத்துகளின் கையில் ஆட்சி வர வேண்டும் என்ற திட்டத்தோடு புரட்சியை வழிநடத்தினார்.. பிப்ரவரியிலிருந்து நவம்பர் வரையிலான புரட்சிகர காலக்கட்டத்தில் லெனின் உட் கட்சி பிரட்சனைகளையும் சமாளிக்க வேண்டியதாக இருந்தது.. கட்சிக்குள்ளே சோசலிச புரட்சியை நடத்த கூடாது என எதிர்த்தார்கள்..
1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி போல்ஷ்விக்குகளின் கூட்டத்தில் பேசிய லெனின் புரட்சியை தொடர்ந்து நடத்துவது குறித்து பேசினார்.அதுவே புகழ் பெற்ற ஏப்ரல் ஆய்வுரை என்று அழைக்கப்பட்டது.ஜாரை அகற்றிய பின்பு ருஸ்யாவில் போல்ஷிவிக்குகளும்,மக்களும் எப்படி செயல்பட வேண்டும் என்று துல்லியமாக எழுதியிருந்தார். சோவியத்துகளை வலுபடுத்த வேண்டும் என லெனின் வலியுறுத்துனார்.
தற்காலிக அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை ஏற்றிருந்தது.ஆனால் தற்காலிக அரசாங்கத்தின் உறுப்பினர்கள் யார்? நிலபிரப்பிரபுக்களும்,முதலாளிகளும்.அதாவது பணக்காரர்கள் பணக்காரர்களோடு இனைந்து இருந்தார்கள். தொழிலாளர்களையும், குடியானவர்களையும், பற்றி கவலை எடுத்துக் கொள்ள பணக்காரர்கள் விரும்பவில்லை.அவர்கள் அக்கறை எல்லாம் தங்களின் செல்வத்தை பற்றியே .அப்படியானால் போல்ஷிவிக்குகள் தற்காலிக அரசாங்கத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?ஆதரிக்க மாட்டோம் சோவியத்துகளையே ஆதரிப்போம். என்ற லெனினின் வழிகாட்டுதல் படி சோவியத்துகலை வலு படுத்தினார்கள்.செஞ்சேனையை, மக்களை,ஆயுதபாணி ஆக்கினார் லெனின் .திட்டமிட்டபடி நவம்பர் மாதம் ஏழாம் நாள் புரட்சி வெற்றி பெற்றது..

முதல் அரசாணை:
நிலப்பிரபுக்களுக்கும், சர்ச்சுகளுக்கும், மடங்களுக்கும், எல்லவகை பணக்காரர் களுக்கும் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.நிலத்தில் உழைக்காதவனுக்கு நிலம் கிடையாது.நிலத்தில் உழைப்பவர்களுக்கே நிலம் சொம்ந்தமாகும்.இதுவே “நிலம் பற்றிய அரசாணை” என்று வரலாற்றில் தடம் பத்தித்து விட்டது.மக்கள் பல நூறு ஆண்டுகளாக கனவு கண்டு எதிர்பார்த்ததை லெனின் தன் எழுத்தில் வடித்தார்.
அடுத்தடுத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன; பிரபு வம்ச, வர்த்தக வம்ச பட்டங்கள் இனி வழங்க படது.இருப்பு பாதைகளும், கடலிலும், ஆறுகளிலும் செல்லும் கப்பல்களும், பாங்கிகளும் எல்லாம் அரசுக்கே சொந்தம் என்ற அர்சாணை பிறப்பிக்கப்பட்டது. ஆலைகளும் தொழிற்சாலைகளும் அரசின் உடைமை ஆகிவிடும். தொழிலாளி வர்க்கம் தானே உற்ப்த்தியை நிர்வகிக்கும். என்று பாட்டாளி வர்க்கத்தின் கடைமையை அரசாணையில் பொறித்தார்..
அதுவரை துன்பத்தில் உழன்றுக் கொண்டிருந்த ரஸ்ய நாட்டு மக்கள் புதிய வாழ்க்கக்குள் நுழைந்தனர்..
உலகை மாற்றியமைத்த முதல் அரசாணை இன்றும் உலகின் பல நாடுகளின் குடியானவர்களின் கனவாகவே இருக்கிறது.இப் பூவுலகின் கடை மனிதன் தன் சுதந்திரத்தை அடையும் வரை லெனின் பிரேரித்த அரசாணை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்…அதுவரை லெனினுக்கு மரணம் என்பதே இல்லை..
வருங்கால கம்யூனிஸ சமூகத்தில் லெனின் முதல் குழந்தையாக பிறப்பார்…லெனினுக்கு மரணம் இல்லை..
சிலம்பரசன் சே…