பொதுத்துறை – இந்தியப் பாதையும் சீனப் பாதையும்! – அ.அன்வர் உசேன்.

மோடி அரசாங்கம் அனைத்தையும் தனி யாருக்கு தாரை வார்த்துக் கொண்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது மக்கள் பயன்படுத்தும் இரயில்வே மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்தும் விற்கப்படுகின்றன. கல்வியும் மருத்து வமும் கூட இதில் அடக்கம். தங்கள் நெருக்கடி காரண மாக பொதுத்துறைகளை விற்கவில்லை! மாறாக தமது கொள்கை அடிப்படையில்தான் விற்கிறோம் என பிரதமர் உட்பட பலரும் பெருமை கொள்கின்றனர்.
இந்தியாவின் பொருளாதார சுயசார்புத் தன்மையை உத்தரவாதப்படுத்தியதில் பொதுத்துறைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதையும் அந்த பொதுத் துறைகளை உருவாக்கியதில் சோவியத் யூனியன் உட்பட சோசலிச நாடுகளின் மகத்தான உதவி இருந்தது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதன் முக்கியத்துவத்தை விடுதலைப் போராட் டத்தில் சிறிதும் பங்கேற்காத சங் பரிவாரம் உணரா மல் இருப்பது ஆச்சர்யம் இல்லைதான்! தனியார்மயம் எனும் தவறான பாதை காங்கிரஸ் ஆட்சியிலேயே துவங்கிவிட்டது என்றாலும் அது தறிகெட்டுச் செல்வது மோடி அரசாங்கத்தின் கீழ்தான்! அண்டை நாடான சீனாவின் அனுபவமோ அல்லது வெனிசூலா உட்பட உலகின் வேறு சில தேசங்களின் அனுபவ மோ தனியார்மயம் தவிர்க்க இயலாத ஒன்று என்பதை வெளிப்படுத்தவில்லை.
பொதுத்துறையில் சீனாவின் சீர்திருத்தங்கள் 2020ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய 500 நிறு வனங்களின் பட்டியலை ஃபார்சூன் இதழ் தொகுத்துள் ளது.

இதில் 124 சீன நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 95 சீன அரசு நிறுவனங்கள் ஆகும். இந்தியா உட்பட மேலும் பல தேசங்களின் 43 பொ துத்துறை நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆக மொத்தம் 500 நிறுவனங்களில் 138 பொதுத்துறையை சார்ந்தவை. இதில் இடம் பெற்றுள்ள அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 118. உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 2005ஆம் ஆண்டு பொதுத்துறை எண்ணிக்கை 45 ஆக இருந்தது; 2020இல் 138 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பெரும்பாலும் சீன நிறுவனங்களின் எண்ணிக்கையின் உயர்வால் நிகழ்ந்துள்ளது.


கீழ்கண்ட 5 நிறுவனங்கள் உலகின் மிகப்பெரியவையாக திகழ்கின்றன:


நிறுவனம்                            தேசம்                  ஆண்டுவருமானம்     USD-BIL                 ஊழியர்
வால்மார்ட்                    அமெரிக்கா                              524                        236                        22,00,000
சைனோ பெக்                 சீனா                                         407                        318                         5,82,648
ஸ்டேட் கிரிட்                     சீனா                                       384                         597                         9,07,677
சைனா நேஷனல்
பெட்ரோலியம்                 சீனா                                       379                         608                         13,44,410
ராயல் டச்சு
ஷெல்                         நெதர்லாந்து-பிரிட்டன்            352                        404                          83,000


*3 சீன நிறுவனங்களும் அரசுக்கு சொந்தமானவை)
(-ஒரு பில்லியன் டாலர்= சுமார் ரூ. 7500 கோடி)


சரியான அரசியல் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளும் இருந்தால் அரசு/பொ துத் துறைகளை உலக சாதனை அளவுக்கு உருவாக்க முடியும் என்பதை சீன அரசாங்கம் நிரூபித்துள்ளது. சீன அரசாங்கம் புரட்சிக்கு பின்னர் இயற்கையி லேயே அரசு/பொதுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் சோசலிச சந்தைப் பொருளா தாரக் கொள்கைகள் அமலாக்கிய பின்னர் பொதுத் துறைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் உருவானது. நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளை லாபம் ஈட்டவும் ஏற்கெனவே லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளை மேலும் வலுப்படுத்தவும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


• 1978-1984 -முதல் சீர்திருத்தம்
• 1985-1992 -இரண்டாவது சீர்திருத்தம்
• 1993-2002- மூன்றாவது சீர்திருத்தம்
• 2003-2012- நான்காவது சீர்திருத்தம்
• 2013-2020 -ஐந்தாவது சீர்திருத்தம்
• 2020-2022- ஆறாவது சீர்திருத்தம்


என 6 கட்டங்களாக இந்த சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கட்டத்தின் அனுபவமும் அடுத்த கட்டத்திற்கான வழிகாட்டுதலை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. சோசலிச சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் தனியார் துறைக்கு குறிப்பிட்ட பங்கை அளிக்கும் அதே சமயத்தில் முக்கிய உற்பத்திப் பிரிவுகளையும் நிதி நிறு வனங்களையும் அரசின் கட்டுப்பாட்டில் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. நவீன கால உலக பொருளா தாரப் போட்டியை சமாளிக்க வேண்டும் எனில் மிகப்பெரிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என சீனா முடிவு செய்தது. அதன் அடிப்படையில் சிறிய நிறுவனங்கள் ஒன்றிணைத்து பெரிய நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. புதிய நிறுவனங்களும் தொடங்கப் பட்டன. லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பே இல்லாத சில நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆனால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலைகள் வழங்கப் பட்டன. கேந்திரமான தொழில்களில் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது எனவும் அவை ஒன்றிய அரசின் கீழ் செயல் படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஏனைய தொழில்களை மாநில அரசாங்கங்கள் நிர்வகிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு பொதுத்துறை!
இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு முக்கிய முடிவாக அரசு சொத்துக்கள் மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (STATE OWNED ASSET SUPERVI SION AND ADMINISTRATION COMMISSION) எனும் அமைப்பு 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு 125க்கும் அதிகமான மிகப்பெரிய பொதுத்துறைகளை நிர்வகிக்கிறது. அவற்றில் பல நியூயார்க்/லண்டன் பங்கு சந்தைகளில் பட்டிய லிடப்பட்டுள்ளன. அதே போல மிகப்பெரிய வங்கிகளும் அரசு கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இந்த வங்கிகள் மத்திய ஹூஜின் முதலீட்டுக் கழகம் (CENTRAL HUIJIN INVESTMENT LIMITED) எனும் அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பொதுத்துறைக ளை செயல்படுத்துவது என்பதுதான். அமெரிக்காவின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனில் கேந்திரத் தொழில்களும் செயற்கை நுண்ண றிவு போன்ற புதிய தொழில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் சீன அர சாங்கம் தெளிவாக உள்ளது. அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனாவின் முதன்மை இடத்தை உத்தரவா தம் செய்யவும் சுயச்சார்பை நிலைநாட்டவும் பொ துத்துறைகள் அவசியம் எனவும் சீன அரசாங்கம் மதிப்பிடுகிறது. மேலும் மக்களின் பொருளாதார வாழ்வில் ஓரளவுக்காவது சமத்துவம் தேவை எனில் அதற்கு பொதுத்துறைகள் மிக அவசியம் தேவை என்ப தும் சீனாவின் கருத்தாகும். சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. இதனை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான் சீன அரசின் நோக்கம் ஆகும்.
கோவிட் வைரஸ் பிரச்சனையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பொழுது பொதுத்துறை நிறுவனங்க ளும் நெருக்கடியில் சிக்கின. இந்த நெருக்கடியிலிருந்து பொதுத்துறைகளை காப்பாற்ற 32.5 பில்லியன் டாலர் அதாவது ரூ. 2,43,750 கோடி நிதியை சீன மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் உதவின. சோசலிச சமூகத்தை இலக்காக கொண்டுள்ள சீனா வில் அரசு/பொதுத்துறைகள் இயங்குவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அரசுத்துறை நிறுவனங்களை அமெரிக்க அல்லது ஏனைய முதலாளித்துவ தேசங்களின் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்த முடியும் என்பதை சீனா நிரூபித்துள்ளது.
தனியார்மயம் யாருக்கு லாபம்?
சீனா மட்டுமல்ல; வெனிசூலா/பிரேசில்/சவூதி அரேபியா/ரஷ்யா போன்ற பல தேசங்களின் பொருளாதார வளர்ச்சியில் அரசுத்துறை/பொதுத் துறைகள் மிக முக்கியப் பங்கை ஆற்றுகின்றன. சில நாட்களுக்கு முன்பு மக்கள் நலனை அடிப்படை யாக கொண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக் குறைக்க பெரு நாட்டு அரசாங்கம் அந்த தேசத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவ னத்தை தேசியமயமாக்குவது என அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் மோடி அரசாங்கம் அனைத்துப் பொதுத்துறைகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க தறிகெட்டுச் செயல்படுகிறது. இந்தியாவில் சில பொதுத்துறைகள் மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள மோடி அரசாங்கம் மறுக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் நவரத்னா/மகாரத்னா/மினிரத்னா என பொதுத் துறைகளை வகைப்படுத்தி சுயேச்சையான செயல்பாடு களுக்கான சூழலை உருவாக்கிய பொழுது பொதுத் துறைகள் இமாலய சாதனைகளை படைத்துள்ளன. 2003ஆம் ஆண்டு ரூ. 42,000 கோடியாக இருந்த பொதுத்துறைகளின் லாபம் 2018ஆம் ஆண்டு ரூ. 1,75,000 கோடியாக உயர்ந்தது. இந்த வருமானத்தை மேலும் உயர்த்த செழுமைப்படுத்துவதற்குப் பதிலாக மோடி அரசாங்கம் தனது கூட்டுக் கொள்ளை கள வாணிகளுக்கு பொதுத்துறைகளை மடைமாற்றத் திட்டமிடுகிறது.
எரிசக்தித் துறையில் ஓன்ஜிசி/ ஐஓசிஎல்/ பிபிசிஎல்/ கெய்ல் (ONGC/IOCL/BPCL/GAIL) ஆகிய நிறுவ னங்கள் செய்த சாதனைகளை எவராவது மறுக்க முடியுமா? மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பில் பெல்லின் சாதனையை குறைத்து மதிப்பிட முடியுமா? சமூக முன்னேற்றத்தில் எல்ஐசி (LIC) மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்கினை எவராவது மறுக்க இயலுமா? பிபிசிஎல் (BPCL) நிறுவனத்துக்கு 17 வெளிநாடுகளில் சொத்துக்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனம் முற்றிலும் தனியாருக்கு தரப்படுகிறது. கப்பல் போக்குவரத்து நிறுவனத்துக்கு அரசு ஆதரவு குறைந்த பிறகு இந்தியாவின் கப்பல் சரக்கு போக்கு வரத்து 40%லிருந்து 6%ஆக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் எச்.எம்.டி. நிறுவனம் மூலம் இயந்திர உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இந்தியா இப்பொழுது 80% இயந்திரங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐ.டி.பி.எல். போன்ற முக்கியமான மருந்து நிறுவனங்கள் மூடப்பட்ட பிறகு மருத்துவ மூலப்பொருட்களுக்கு சீனாவை சார்ந்தி ருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறைகள் கூட்டுக் கொள்ளை களவாணிகளுக்கு தாரை வார்க்கவே தனியார்மயப் படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. பங்கு விற்பனை/ கேந்திர விற்பனை/ பணமயமாக்கல் என எந்த நாமகர ணம் சூட்டினாலும் இது அப்பட்டமான தனியார்மய வஞ்சகம்தான்! தனியார்மயத்தை நம்பிய பிரிட்டன் போன்ற பல தேச மக்கள் தமது கருத்துகளை மறுபரி சீலனைக்கு உட்படுத்தும் இந்த சமயத்தில் மோடி அர சாங்கம் மகத்தான சாதனைகளை படைத்த பொதுத் துறைகளை தனியார்மயமாக்க துடிக்கிறது. இது தேசத்துக்கும் மக்களுக்கும் பெரும் தீங்கை விளை விக்கக் கூடிய ஒன்று. மோடி அரசாங்கம் அரங்கேற்றிய பல பொருளாதார அழிவு பணிகளில் தனியார்மயமும் ஒன்று என்பதை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.
தரவுகள்: இந்தியன் எக்ஸ்பிரஸ்
/குளோபல் டைம்ஸ்/ சவுத் சைனா மார்னிங் போஸ்ட்.

Leave a Reply