வர்க போராட்டத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சோறு கிடைக்க போராடினால் போதும், அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். புரட்சிகரமான தெரு சண்டைகள் நடத்தினால் போதும், நிறுவனம், கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்கப்போர் பிரச்சனைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவை எல்லாம் வேண்டியதில்லை என்று, வேறு சிலர் எண்ணுகிறார்கள்.
ஒரு மார்க்சியவாதி இந்த வர்க போராட்டத்தை எப்படி பார்கிறான்?
மூன்று அம்சங்கள் கொண்ட ஒரே ஒரு பிரச்னையாக பார்கிறான். 1. பொருளாதார போராட்டம், 2. அரசியல் போராட்டம், 3. தத்துவ அறிவு போராட்டம் என்று மூன்று அம்சங்கள் கொண்டது வர்க போராட்டம் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.
அ. சுதந்திரமாக போராடாமல் (அதாவது, தத்துவ அறிவு போராட்டம் நடத்தாமல்), சமாதானத்துக்காக போராடாமல் (அதாவது, அரசியல் போராட்டம் இல்லாமல்), சோற்றுகாக போராடுவது (அதவாது, பொருளாதார போராட்டம் நடத்துவது) சாத்தியம் இல்லை.
ஆ. அரசியல் போராட்டத்தை பற்றியும் அதே விதமாக சொல்லமுடியும். மார்க்ஸ்க்கு பிறகு இந்த அரசியல் போராட்டமே அசல் விஞ்ஞானமாகப் பரிணமித்துவிட்டிருக்கிறது. ஆகவே அரசியல் போராட்டத்தை பற்றி பேசும் பொழுது பொருளாதார நிலைமைகளையும் தத்துவ போக்குகளையும் கவனித்து கணக்கில் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இ. தத்துவ போராட்டம் பிரச்சாரம் என்ற உருவத்தில் நிலவுகிறது. ஆகவே இந்த தத்துவ போர் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது அரசியல் பொருளாதார நிலமைகளை நிச்சயம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
உண்மைதான்